இசைவாணி சர்ச்சை குறித்து பேசி வீடியோ வெளியிட்ட வணக்கம்டா மாப்பிளைக்கு ஏற்பட்ட விபரீதம்

0
219
- Advertisement -

இசைவாணி பாடலுக்கு எதிராக வீடியோ போட்ட youtuberக்கு நேர்ந்திருக்கும் விபரீதம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் கானா பாடகர் இசைவாணி. இவர் வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர். இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் இசை. குறிப்பாக ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசைவாணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் இவருடைய கனவு, லட்சியம். அதுமட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்து பெருமைப்படுத்தியது ஒருவராக என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நிறைய இசை கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.

- Advertisement -

இசைவாணி குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இசைவாணி பாடி இருக்கிறார் என்று எழுந்து இருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இசைவாணி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர் நிறைய கிறிஸ்துவ மத பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய கானா மூலம் இவர் தன் மதத்தை மற்றவர்களுக்கும் பரப்புகிறார். அந்த வகையில் இவர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாண்டு மையத்தின் இசை கச்சேரி விழாவில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார்.

இசைவாணி பாடல்:

குறிப்பாக, இவர் ‘ஐ அம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை நிறைய கச்சேரிகளில் பாடி இருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் வைரலாக, பலருமே கண்டனமும் தெரிவித்து இருந்தார்கள். அதோடு இவர் ‘ஐ அம் சாரி ஐயப்பா’ பாடலில் இந்து மதத்தை தாழ்த்தியும், கிறிஸ்தவ மதத்தை புகழ்ந்தும் பாடி இருக்கிறார்கள். கடந்த மாதம் நடந்த மார்கழி மக்கள் இசையில் கூட இவர் இந்த பாடலை பாடியிருந்தார். இவர் ஐயப்பன் பக்தர்களை தாக்கியும், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இசைவாணி மீது புகார்:

மேலும், பா. ரஞ்சித் மற்றும் இசைவாணியின் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து பக்தர் சங்கத்தினர் புகார் கொடுத்து இருந்தார்கள். பின் இந்த விவகாரம் தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது. அதில், இசைவாணியுடன் துணை நிற்க வேண்டும் என்று கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இசைவாணியை எதிராக விமர்சித்து தேனியை சேர்ந்த வணக்கம்டா மாப்பிள்ளை என்ற youtuber வீடியோ ஒன்று போட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சிலர், youtuberஐ நேரில் சந்தித்து கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் கருத்து:

அது மட்டுமில்லாமல் அவரை தாக்கியும் இருக்கிறார்கள். அப்போது அந்த youtuber ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலருமே இசைவாணிக்கு எதிராகவும் youtuber-க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அதில், நடுநிலைவாதிகளே இந்த வீடியோவை பார்த்து விழித்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நாளை உனக்கும் உன் சாமியை கும்பிட உரிமை இருக்காது என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது இந்த இசைவாணி விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement