-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பொங்கல் ரேசில் பாலா- அருண் விஜய் காம்போ முந்துமா?- வணங்கான் படத்தின் முழு விமர்சனம் இதோ

0
46

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் ‘வணங்கான்’. அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதாரவி ஆகியோர் எடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், பாலாவும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பெண் பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல் நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி. அதற்குப் பிறகு என்ன ஆனது? அதாவது என்ன காரணத்திற்காக அந்த கொலையை கோட்டி செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி துருவி கேட்கிறது.

அதற்கு கோட்டி பதில் சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்தப் படத்தில் பாலாவின் வண்ணத்தில் அருண் விஜய் முற்றிலும் வேறு ஒருவராய் தெரிகிறார். அவரின் நடிப்பு படத்திற்க்கு பெரும் பலம் சேர்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் மொழியை அச்சு அசலாக வெளிப்படுத்துவது சிறப்பாக அமைந்துள்ளது. நாயகி ரோஷினியும் நடிப்பில் என்டேர்டைன்மெண்ட்க்கு பஞ்சமில்லை. அவரின் தங்கையாக நடித்திருப்பவரும் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், சமுத்திரக்கனி போலீசாகவும் மற்றும் மிஷ்கின் நீதிபதியாகவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை செவ்வெனச் செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். வழக்கம்போல, இயக்குனர் பாலாவுக்கே உரிதான வன்முறை படம் முழுவதும் இருந்தாலும், அவரின் சிறப்பம்சமான கவுண்டர்கள் தியேட்டரையே சிரிக்க வைக்கிறது. குறிப்பாக பாலா ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான பாணியில் நடிக்க வைத்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

-விளம்பரம்-

ஆனால், ஒரு சிலரை தாக்கி பேசுவது போல் இருக்கும் சில காமெடிகளை படத்தில் தவிர்க்கலாம். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசையில் அமைந்திருக்கும் பாடல் சுமாராக இருந்தாலும், சாம் சிஎஸ் பின்னணிசையில் சிறப்பான பணியை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சுவாரசியமாக இருந்தாலும், கதையின் மையக்கரு இன்னமும் அழுத்தமாக இருந்திருந்தால், ரசிகர்களை படம் இன்னும் ஆழமாக சென்று சேர்த்திருக்கும்.

நிறை :

அருண் விஜயின் சிறப்பான நடிப்பு

பின்னணி இசை

சென்டிமெண்ட் காட்சிகள்

நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம்

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமாக நடிக்க வைத்திருப்பது

குறை:

முதல் பாதி பொறுமை.

பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘வணங்கான்’ அருண் விஜயின் பொங்கல் விருந்து

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news