தொடர்ச்சியான சோக சீன், நிஜமாகவே நடந்த சோகம் – வானத்தை போல சீரியலில் மீண்டும் வருவாரா மனோஜ் ?

0
1728
manoj
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மேலும், சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார் . சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து வந்தார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Vanathai Pola Serial Actor Met With Accident | வானத்தை போல

இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது. பின் ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். பின் சீரியலில் இருந்து ஸ்வேதாவை விலகியதை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். சினிமாவில் அறிமுகமாகிட்டுத் தான் சீரியல் பக்கமே வந்தார். அதனால் மறுபடியும் சினிமா வாய்ப்பு வந்ததால் சீரியலில் விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

- Advertisement -

சீரியலில் விலகிய நடிகர்கள்:

இவரும் பல வருடமாக சீரியலில் நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து சமீபத்தில் சீரியலில் இருந்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த சங்கரேஸ் விலகி இருக்கிறார். இதை இவரே சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். தற்போது இவருக்கு பதிலாக சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் நடிக்கிறார். தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு வருகிறார்கள். இப்படி பல நடிகர்கள் மாறினாலும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

விபத்தில் சிக்கிய மனோஜ் குமார்:

மேலும், வானத்தைபோல சீரியலில் முத்தையாவாக நடித்து வருபவர் இயக்குனர் மனோஜ்குமார். இவர் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 67 வயதாகிறது. இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மனோஜ் குமார் சில தினங்களுக்கு முன் மாருதி சுசுகி காரில் தன்னுடைய மனைவி செல்வி, உதவியாளர் ரகுபதி ஆகியோர் உடன் தேனிக்கு புறப்பட்டார். அப்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லூரி அருகே காலை 10 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது.

-விளம்பரம்-

விபத்தில் சிக்கிய மனோஜின் நிலை:

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேருமே காயமடைந்து இருக்கின்றனர். பின்னர் அங்குள்ளவர்கள் காயமடைந்த மூவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடந்த விபத்து குறித்து வானத்தை போல தொடரில் நடித்த சில நடிகர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியது, நடிகர் மனோஜ் குமார் சொந்த ஊருக்கு தன் மனைவியுடன் காரில் போய்க் கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் மனோஜ்குமார் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை. இருந்தாலும் பெரிய அடி என்று சொல்கிறார்கள். இப்போது மனோஜும் அவருடைய மனைவியும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள்.

மனோஜ் சீரியலில் நடிப்பாரா:

கடவுள் அருளால் உடல்நலம் தேறி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மனோஜ் தொடர்புடைய காட்சிகள் சோகமானதாக இருக்கிறது. இதனால் தான் இவர்களுடைய வாழ்க்கையிலும் சோகம் நடந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், நடந்த விபத்தையும் சீரியல் சீனையும் முடிச்சுப் போடுவது ரொம்ப தவறு. சீரியலில் கதைக்கு என்ன தேவையோ அதை எடுக்கிறார்கள். அதனால் தான் விபத்து நடந்தது என்று சொல்வதெல்லாம் அர்த்தமில்லாத ஒன்று. இந்த சூழலில் அவர் நடிப்பாரா? என தெரியவில்லை. அவர் மீண்டும் பூரண குணம் அடைந்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement