வானத்தை போல சீரியலில் இன்றோடு விடைபெறும் ஸ்வேதா – நாளை முதல் இவர் தான் துளசி.

0
2947
vanathaipola
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் வானத்தைப் போல. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
வானத்தைப் போல மன்யா
மான்யா

ஸ்வேதா, 2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த சீரியல் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் தெலுங்கு படத்திலும் ஸ்வேதா நடித்தார். இதனை தொடர்ந்து இவர் குறும்படங்கள், ஆல்பம் சாங் எனப் பலவற்றிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடரில் இருந்து ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து தெரிவித்த அவர், ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். அந்த ரூமர்ஸ் இப்போது உண்மையாகி விட்டது. இது தான் என்னுடைய கடைசி நாள். இனி ரசிகர்கள் என்னை துளசியாக பார்க்க முடியாது. அது மட்டுமில்லாமல் என்னை துளிசியாக ஏற்றுக்கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் நன்றி என்று தெரிவித்து இருந்தார்.

Vanathai Pola Tulasi Quits | வானத்தை போல சீரியல் துளசி

இந்த நிலையில் இந்த தொடரில் துளசியாக மான்யா நடிக்க இருக்கிறார். ஜெமினி தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தெலுங்குத் தொடரான பாக்யரேகா (Bhagyarekha) எனும் தொடரில் நடித்திருக்கிறார். இன்றுடன் ஸ்வேதா நடித்த காட்சிகள் நிறைவடைய இருக்கிறது. துளசி கதாபாத்திரத்தில் மன்யா நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நடிக்கும் காட்சிகளும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement