கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் வானத்தைப் போல.
இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார் . முதலில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து வந்தார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி நடித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது. பின் ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அதில் அவர் புரொடக்ஷன் தரப்பில் பிரச்னை, தேதி, நேரம் போன்ற பிரச்னைகளால் சீரியலில் இருந்து விலகிட்டேன்.
சீரியலில் இருந்து விலகிய ஸ்வேதா:
அது குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்தார். ஸ்வேதா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக கன்னட சீரியல் நடிகை மான்யா என்பவர் நடித்து வருகிறார். இப்படி சீரியலில் இருந்து ஸ்வேதாவை விலகியதை தொடர்ந்து இந்த தொடரில் சின்னராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். இதற்கு அவர் கூறியது, சினிமாவில் அறிமுகமாகிட்டுத் தான் சீரியல் பக்கமே வந்தார். அதனால மறுபடியும் சினிமா வாய்ப்பு வந்ததால் சீரியலில் விலகி விட்டேன்.
சின்ராசு கதாபாத்திரம் மாற்றம்:
தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவரும் பல வருடமாக சீரியலில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் துளசி கணவன் குடும்பத்தில் பல பிரச்சினைகள் போகி நஷ்டம் அடைவதால் துளசி கணவருக்கு பண நெருக்கடி வருகிறது. இதனால் துளசியின் மாமனார் உன்னுடைய அண்ணன் இடம் இருந்து சொத்து எழுதி வாங்கிக்கொண்டு வா என்று கேட்கிறார். ஆனால், துளசி சொத்து வாங்கி தர வேண்டும் என்றால் என் அண்ணனுடன் இருந்த உறவை முறித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்.
வானத்தை போல சீரியல் கதை:
அண்ணன் – தங்கை உறவு நீடிக்குமா? மீண்டும் குடும்பம் இணையுமா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வானத்தைப்போல சீரியலில் இருந்து நடிகர் ஒருவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, வானத்தைப் போல சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சங்கரேஸ். இவர் தான் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதை இவரே சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
சீரியலில் நடிகர் மாற்றம்:
இவர் சீரியலில் விலகியதற்கான காரணம் தெரியவில்லை. மேலும், இவருக்கு பதிலாக சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் புதிதாக வேறு ஒரு நடிகர் நடிக்க இருக்கிறார். அவர் பெயர் சந்தோஷ். இவரும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு வருகிறார்கள். இதனால் சீரியலின் டிஆர்பி கொஞ்சம் முன்னும் பின்னுமாக மாறுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைகிறது. இப்படியே தொடர்ந்தால் சீரியல் டிஆர்பி தடுமாற்றம் தான்.