உங்களுக்கு வேணா இது போழுதுபோக்கா இருக்கலாம், ஆனா எங்கள மாதிரி – சீரியலை நிறுத்த சொன்ன ரசிகருக்கு ஸ்ரீயின் பதில்.

0
1664
Sreekumar
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளைநிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் பம்பரக்கண்ணாலே, சரோஜா தேவி, ரங்கூன், ஆர்கேநகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் நடிகர் ஸ்ரீ சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரீகுமார் திரை பயணம்:

குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1, கலைஞர் டிவியில் மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனிடையே இவர் 2009ம் ஆண்டு ஷமிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமிதா வேற யாரும் இல்லைங்க, ‘தோழா தோழா தோல் கொடு’ என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷமிதா.

நடிகர் ஸ்ரீ குடும்பம்:

பாண்டவர் பூமி படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதற்கு பிறகு இவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார். இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது ஸ்ரீ அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் பொன்னி மனசு மாறி சின்ராசை ஏற்றுக்கொண்டார்.

-விளம்பரம்-

வானத்தைப்போல சீரியல்:

இன்னொரு பக்கம் துளசி கர்ப்பம் கலைந்த உண்மை அறிந்து ராஜபாண்டி அவரை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். அது மட்டும் இல்லாமல் துளசி உடன் வாழ முடியாது என்று பஞ்சாயத்தில் பேசி பிரிந்து விடுகிறார்கள். இதனை அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பின் உச்சத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ அவர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி இருக்கிறார். அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீ கொடுத்த பதில்:

அப்போது ஸ்ரீ அவர்கள் தான் டப்பிங் செய்த போது புகைப்படத்தை பகிர்ந்து, நடிப்பதை விட தன்னுடைய குரலில் டப்பிங் கொடுப்பதன் மூலம் தான் முழுமை அடைகிறது என்று கூறுகிறார். இதற்கு நெட்டிசன் ஒருவர், தயவு செய்து சீரியலை எப்போது முடிப்பீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், இதை நம்பி 80 குடும்பம் வாழ்கிறது. அதனால் எங்களுடைய முயற்சியை கொடுக்கிறோம் என்று கூறியிருந்தார். அதற்கு நெட்டிசன், சில வாரங்களாகவே சீரியல் ரொம்ப இரிட்டேட் செய்கிறது. தயவு செய்து டிராக்கை மாற்றுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement