சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் வானத்தைப் போல. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்துவந்தார் . அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக நடித்துவந்தார் .
சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த ஸ்வேதா, புரொடக்ஷன் தரப்பில் பிரச்னை. தேதி, நேரம் போன்ற பிரச்னைகளால் சீரியலில் இருந்து விலகிட்டேன். மேலும், அது குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
திடீரென்று விலகிய சின்ராசு – துளசி :
ஸ்வேதா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக கன்னட சீரியல் நடிகை மான்யா என்பவர் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஸ்வேதாவை தொடர்ந்து இந்த தொடரில் சின்னராசுவாக நடித்து வந்த தமனும் விலகி இருப்பதாகவும் தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்க இருபாதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவர் மதுரையை சேர்ந்தவர். தன்னுடைய 14 வயதிலேயே நடிக்க சென்னைக்கு வந்தார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஸ்கிரிப்ட் டைரக்டிங் மீது அதிக ஆர்வம் இருந்ததால் இவர் அதில் கவனம் செலுத்தினார். அதன் மூலமாக இவர் சினிமா வாய்ப்பு தேடினார். பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் பெற்றோர் ஆசையின்படி ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு கிடைத்த பலரின் அறிமுகத்தால் நடிப்பைக் கற்றுக் கொள்ள தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சி சேர்ந்தார். அவரிடம் தமன் முறையாகவும் நடிப்பைப் பயின்றார்.
சினிமாவில் இருந்து வந்த நடிகர் :
இவர் ஆச்சரியங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதற்குப் பிறகு தொட்டால் தொடரும், சேதுபூமி, புயலா கிளம்பிவரும், 6 அத்தியாயம், நேத்ரா போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால், இவர் நினைத்த வெற்றி அமையவில்லை. அதன் பின்னரே இவர் சீரியலில் நடிக்கத்து வங்கினார்.
தமன் கூறியுள்ள காரணம் :
இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து தமன் வெளியேறிய காரணம் குறித்து பேசிய சீரியல் குழுவை சேர்ந்த ஒரு சிலர், அவர் ஏன் சீரியலில் இருந்து போனாருன்னு எங்களுக்கே காரணம் தெரியலை. அவராவேதான் வெளியேறி இருக்கார். சினிமாவுல அறிமுகமாகிட்டுத்தான் சீரியல் பக்கமே வந்தார். அதனால மறுபடியும் சினிமா வாய்ப்பு வந்ததுனு சொல்லிட்டுப் போறதை எங்களால் நம்ப முடியலை. நல்லா போயிட்டிருக்கிற சீரியல்ல திடீர்னு ஒருத்தர் விலகி, ஒருவேளை அவர் போன பிறகு ஆடியன்ஸ் அந்த சீரியலைப் புறக்கணிச்சா சீரியலை நம்பி இருக்கிற சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்கள்.