அது என்ன ஸ்மார்ட் வாட்ச்சா ? கேலிக்கு உள்ளான சன் டிவி சீரியல் காட்சி

0
441
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று உருவானதிலிருந்து சீரியல்கள் இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சமீபகாலமாக தொலைக்காட்சி தொடர்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைகளை ஒளிபரப்பி வருகிறது. அதிலும் சன் டிவி என்றாலே சீரியல்கள் தான் மக்களுக்கு முதலில் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்த வரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் வானத்தைப் போல. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார். சின்னராசு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தமன். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக நடித்து வந்தார் .

- Advertisement -

வானத்தைப் போல சீரியலில் விலகிய நடிகர்கள்:

சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது. இப்படி ஒரு நிலையில் சீரியலில் இருந்து விலகுவதாக ஸ்வேதா அறிவித்து இருந்தார். அதோடு புரொடக்ஷன் தரப்பில் பிரச்னை, தேதி, நேரம் போன்ற பிரச்னைகளால் சீரியலில் இருந்து விலகிட்டேன் என்றும் கூறி இருந்தார் . மேலும், ஸ்வேதா விலகியதை தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக கன்னட சீரியல் நடிகை மான்யா என்பவர் நடித்து வருகிறார்.

வானத்தைப்போல சீரியல் கதை:

அதே போல் ஸ்வேதாவை தொடர்ந்து இந்த தொடரில் சின்னராசு ரோலில் நடித்து வந்த தமனும் விலகினார். தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். மேலும், துளசியின் மாமனாரும் அவருடைய தங்கையும் சேர்ந்து துளசியின் அண்ணன் சின்னராசின் சொத்தை அபகரிக்க பல திட்டங்கள் தீட்டுகிறார்கள். துளசி இவர்களின் திட்டம் தெரிந்து கொண்டு தன்னுடைய அண்ணன் உறவை முறித்துக் கொள்ள மாட்டேன் தொடருவேன் என்று சொல்லுங்கள் வாங்கி தருகிறேன் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

வானத்தைப்போல சீரியல் வீடியோ:

இப்படி பல திருப்பங்களுடன் வானத்தைப்போல சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், துளசி கையில் சின்ராசு என்று பெயர் பச்சை குத்தி இருக்கும். அதேபோல் சின்ராசு தன்னுடைய கையில் துளசி என்று பச்சை குத்தி இருப்பார். துளசி தன்னுடைய வீட்டில் இருந்து கையை பார்த்து அண்ணா என்று கூப்பிடுகிறார். உடனே சின்ராசு அவர் வீட்டில் இருந்து கொண்டு கையை பார்த்து சொல்லுமா தங்கச்சி என்கிறார்.

வீடியோவை விமர்சித்த ரசிகர்கள்:

இப்படி இவர்கள் இருவரும் கையை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதிலும் சிலர், இது தெரிஞ்சிருந்தா நான் மொபைலுக்கு ரீ-சார்ஜ் பண்ணி இருக்க மாட்டேன் என்ற எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் இந்த வீடியோ பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement