‘இது தான் என்னுடைய கடைசி எபிசோட்’ – வானத்தை போல சீரியல் நடிகை கொடுத்த ஷாக்.

0
2092
swetha
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் வானத்தைப் போல. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக நடித்து வருகிறார். ஸ்வேதா கர்நாடகாவை சேர்ந்தவர்.

-விளம்பரம்-
Vanathai Pola - Promo | 15 March 2021 | Sun TV Serial | Tamil Serial -  YouTube

இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்துள்ளார். மேலும், ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் முதலில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். பின் சீரியல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக கலர்ஸ் கனடா சேனலில் தொடரில் நடித்தார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த சீரியல் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் தெலுங்கு படத்திலும் ஸ்வேதா நடித்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் குறும்படங்கள், ஆல்பம் சாங் எனப் பலவற்றிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் சோசியல் மீடியாவில் உருவாகி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக ஸ்வேதா சோசியல் மீடியாவில் தன்னுடைய கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதை நான் உங்களிடம் சொல்லணும் என்று காத்திருந்தேன். ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். அந்த ரூமர்ஸ் இப்போது உண்மையாகி விட்டது. இது தான் என்னுடைய கடைசி நாள். இனி ரசிகர்கள் என்னை துளசியாக பார்க்க முடியாது. அது மட்டுமில்லாமல் என்னை துளிசியாக ஏற்றுக்கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் நன்றி.

-விளம்பரம்-

இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று தெரிவித்திருக்கிறார். இப்படி ஸ்வேதா கூறியிருக்கிற தகவல் ரசிகர்களுக்கு பயங்கர அதிர்ச்சி என்று சொல்லலாம். திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்றவுடன் ரசிகர்கள் எல்லோருக்கும் கஷ்டம் தான். தற்போது துளசி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement