இதான் வலிமை அப்டேட் – கொடுத்த வாக்குறுதி குறித்து பேசிய வானதி ஸ்ரீநிவாசன். வீடியோ இதோ.

0
4533
vanathi
- Advertisement -

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

- Advertisement -

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக கட்சி சார்பாக வானதி ஸ்ரீநிவாசனுக்கு சீட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை வானதி ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார். அப்போது அஜித் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வானதி ஸ்ரீனிவாசனிடம் ‘வலிமை அப்டேட் எப்ப’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த வானதி ஸ்ரீநிவாசன், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று பதில் அளித்ததோடு, Vanathi4KovaiSouth #Valimai #ValimaiUpdate போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் வானதி ஸ்ரீநிவாஸன் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வானதி ஸ்ரீனிவாசனிடம் வலிமை அப் டேட் குறித்து நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிற்று என்று கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு பதில் அளித்த வானதி ஸ்ரீநிவாசன் , நான் அந்த பதிவை போட்ட அடுத்த நாள் படத்தின் அப்டேட் டை சொல்லிவிட்டார்கள். கொரோனா பிரச்சனை காரணமாக அப்டேட் வராது என்று சொன்னதே ஒரு அப்டேட் தானே. அவர்களே அப்டேட் கொடுத்துவிட்டார்களே என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement