தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது.

இந்த நிலையில் கோவை தெற்கில்திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமாரும், அதிமுக இணைந்த பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப்பும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதையும் பாருங்க : ‘ரொம்ப பெரிய இழப்பு’ – பிக் பாஸ் நடிகர் கணேஷ் மனைவி நிஷா வீட்டில் நேர்ந்த இழப்பு. நிஷாவின் கண்ணீர் பதிவு.

Advertisement

இந்த தொகுதியில் ஆரம்பத்தில் ஒரு சில சுற்றில் முன்னணியில் இருந்து வந்தார் கமல். இவருக்கும் வானதி சீனிவாசனுக்கு இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் வானதி ஸ்ரீநிவாசன்,1728 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடும் போராட்டதிற்கிடையே கமல் தோல்வியுற்றார். இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வானதி ஸ்ரீனிவாஸ் அலுவலகம் திறந்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இந்த அலுவலகம் திறந்தது குறித்து பலரும் கேலி செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே அந்த அலுவலகத்தில் பூஜை நடைபெற்ற சாமி படத்தின் சுவற்றில் தன லாபம் என்று எழுதப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு பலரும் கேலி செய்து வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் வாசி, இந்தியாவுலயே ஏன் நம்ம வேல்டுலேயே ஒரு MLA ஆபிஸ்ல “தனலாபம்”ன்னு எழுதி ஓப்பனா யாவாரத்த தொடங்கினது நம்ம வானதி அக்கா தான் !! அக்கா !! அந்த மயிலாப்பூர் ஃபேன் EMI பாக்கி ₹700 கட்டிருவீங்க இல்ல? என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

மற்றொரு ட்விட்டர் வாசி, MLA அலுவலகத்துல “தனலாபம் “னு எழுதி பூஜை போட்டு திறந்த முதல் இந்திய MLA ….வானதி அக்கா தான், ஏன்கா வட்டிகடையா திறந்திருக்க என்று கேலி செய்துள்ளார். இதே போல சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமா வட்டிக்கடையா? தனலாபம் என்று போட்டு குத்துவிளக்கு ஏற்ற என்று பலர் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement