பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார்.
மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மேலும், இவர் சீரியல் நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள நிஷா விக்ரம் பிரபு நடித்த வேற மாதிரி, விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : கொன்றுவிடுவேன் என்று திமுக பிரமுகர்கள் மிரட்டுகிறார்கள் – வீடியோவை பகிர்ந்து ஸ்டாலினிடம் முறையிட்ட மருது பட நடிகை.
அதே போல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நிஷா கடந்த சில மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு கடந்த ஜூன் 29 பெண் குழந்தை பிறந்தது. 10 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கணேஷ். மேலும் தனது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் நிஷா, எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நிஷாவின் பாட்டி உடல் நலக் குறைவால் பதிவகப்பட்டு காலமாகி இருக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிஷா, என் வாழ்க்கையில் யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் உண்டாகியுள்ளது. என் பாட்டியை இழந்துவிட்டேன். இது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பார். எப்போதும் அரவணைப்பார். அவர் நல்ல ஆசிரியர். நல்ல நகைச்சுவையாளர் மற்றும் எப்போதுமே சிறந்த தோழியாக இருக்கக் கூடியவர். என்னுடைய செல்ல பாட்டி. அமைதி அடையுங்கள் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.