விக்ரம் படத்தை பார்த்துவிட்டு BJP MLA வானதி போட்ட ட்வீட் – தேர்தலில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு அவர் சொன்ன விஷயம்.

0
262
- Advertisement -

கமலின் விக்ரம் படம் குறித்து பிஜேபி கட்சி உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிவிட்டிற்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
vikram

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், படத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க செல்கிறார்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். ஆகையால், விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரப்பு மாஸாக இருக்கிறது.

கமல் கொடுத்த பரிசு:

இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல்.

-விளம்பரம்-

விக்ரம் படம் பற்றிய தகவல்:

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் படம் குறித்து பிஜேபி உறுப்பினர் வானதி சீனிவாசன் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

வானதி சீனிவாசன் டீவ்ட்:

அதில் அவர் கூறியிருப்பது, தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் போட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளது கமலை அரசியலுக்கு வர வேண்டாம் என்று சூசகமாக தெரிவித்தது போல இருக்கின்றது என்று பலர் கூறி வருகின்றனர்.

Advertisement