‘இந்த மாதிரி படத்துல எல்லாம் நடிச்சா’ – பேச்சுலுர் படத்தில் நடிக்க மறுத்த காரணத்தை சொன்ன வாணி போஜன்

0
1065
- Advertisement -

பேச்சுலர் படத்தில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் இது தான் என்று நடிகை வாணி போஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் வாணிபோஜன். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து இவர் வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து இருந்தார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க தொடங்கினார் வாணி.

-விளம்பரம்-

இவர் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வாணி. மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார்.

- Advertisement -

வாணிபோஜன் குறித்த தகவல்:

அந்த வகையில் தற்போது இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் செங்களம். இந்த தொடரில் கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தருண் குமார் இசையமைத்திருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லர் பாணியில் இந்த வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள்.

வாணி போஜன் நடிக்கும் படங்கள்:

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து வாணி அவர்கள் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் போன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக வாணி போஜன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தான் தவறவிட்ட படம் குறித்து கூறியிருந்தது, பேச்சுலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு முதலில் வந்தது.

-விளம்பரம்-

பேச்சுலர் படத்தில் நடிக்காத காரணம்:

ஆனால், இந்த படத்திற்கு நான் செட்டாகுவானா? என்ற யோசனை எனக்கு இருந்தது. காரணம், இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தால் நம்முடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்த படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க தயங்கினேன். ஆனால், அந்த படத்தில் நான் நடித்திருந்ததால் இயக்குனர் எனக்காக சில காட்சிகளை மாற்றி இருப்பார்.

பேச்சுலர் படம்:

எனக்காக எந்த காட்சியும் இயக்குனர் மாற்றக்கூடாது. இதன் காரணமாக தான் நானே படத்தில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பேச்சுலர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement