என்னை ரிஜெக்ட் செய்த ஹீரோ படத்தில் மீண்டும் நடிக்க கூப்பிட்டாங்க – அவமானபடுத்தியவருக்கு வாணி போஜன் கொடுத்த பதிலடி.

0
506
vanibhojan
- Advertisement -

சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்கள் எல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார் நம்ம வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதிலும்,ரசிகர்கள் சத்யா என்பதைவிட தாசில்தார் என்று தான் அவரை அதிகம் அழைப்பார்கள்.

வீடியோவில் 7 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை.

- Advertisement -

சீரியல் To சினிமா :

இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார். முதல் படத்திலேயே இவருக்கு விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன் முதன் முறையாக விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில்,எனக்கு சிறு வயது முதலே இரண்டு கனவு தான் ஒன்று ஏர் ஓஸ்டஸ்சாக போக வேண்டும் இல்லை மாடலிங் துறையில் போக வேண்டும் என்பது தான். ஆனால், என்னுடைய சமூகம் சிறிய சமூகம் என்பதால் அப்படிபட்ட வேலைகளை செய்ய என்ன ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் எப்படியோ நான் இந்த இரண்டு வேலைகளையும் செய்து விட்டேன். நான் ஏர் லைன் நிறுவனத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்தேன். பின்னர் சூப்பர் வைசராக இருந்தேன். அதன் பின்னர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் நான் மேனேஜராக சேருவதாக இருந்தது. அதில் சேரும் நேரத்தில் நான் டிகிரி கூட முடிக்கவில்லை. அப்போது நான் கரஸ்பாண்டன்ட்டில் படித்துக்கொண்டு இருந்தேன். அதை முடிக்காமல் போனதால் எனக்கு மேனேஜர் வேலை கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

வெறும் 320 ரூபாய் தான் இருந்தது

அதை நம்பி இருந்த வேலையை விட்டு விட்டேன் அப்போது என்னிடம் வெறும் 320 ரூபாய் தான் இருந்தது. அதன் பின்னர் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தது. அதன் பின்னர் தான் மாடலிங் விளம்பரம் என்று துவங்கிவிட்டேன். என் தோழி தான் அந்த யோசனையை கொடுத்தால். ஆனால், இப்போதும் எனக்கு ஒரு 9 டு 5 ஜாப் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுது என்று கூறியுள்ளார்.

ரிஜெக்ட் செய்த ஹீரோக்கள் :

அதே போல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வாணி போஜன் ”நான் சீரியலில் நடித்ததால் சினிமாவில் என்னை பல ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்து இருக்கிறார்கள் ஒரு சில படங்கள் ஒப்பந்தம் வரை சென்று விடும் ஆனால் அவங்க சீரியல் நடிகை அவர்கள் எப்படி சினிமாவிற்கு ஒத்து வருவார்கள் என்று ரிஜெக்ட் செய்து விடுவார்கள். ஆனால், இப்போது என்னை ரிஜெக்ட் செய்த ஒரு சில ஹீரோக்களின் படங்களை நான் ரிஜெக்ட் செய்து இருக்கிறேன். ஒருவரிடம் மரியாதை கிடைக்கவில்லை என்றால் நாம் ஏன் அவர்கள் படத்தில் நடிக்க வேண்டும்.

Advertisement