‘நானும் வன்னியர் தான், ஆனா எங்க சமூகத்தினரே என்ன ‘-சூர்யாவிற்கு ஆதரவாக பேசியதால் சீரியல் நடிகர் சந்தித்து வரும் பிரச்சனை.

0
603
arunrajan
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெய் பீம் இருக்கிறது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் இந்த படத்தை கண்டித்து வன்னியர் சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர்.

-விளம்பரம்-

வன்னியர் இனத்தை இழிவுபடுத்துவதற்காகவே படத்தில் காட்சி வைத்துள்ளார்கள் என்று பல இடங்களில் பல அமைப்புகள் போராட்டம் செய்வது மட்டும் இல்லாமல் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் சில அரசியல் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் #westandwithsurya என்று பலபேர் சூர்யாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றார்கள்.

- Advertisement -

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகர் அருண்ராஜன், ஜெய் பீம் விவகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவால் பலர் தன்னை திட்டி வருவதாக கூறியுள்ளார். பொதுவா நம்ம சார்ந்த சமூகத்தை வெளிப்படையாச் சொன்னா முத்திரை குத்தப்படலாம். ஆனா ஒரு நல்ல விஷயத்துக்காகச் சொல்றது தப்பில்லைனுதான் நான் வெளிப்படையாப் பேசினேன். நான் வீடியோ வெளியிட்டதுமே கமென்ட்ல திட்டத் தொடங்கிட்டாங்க.

‘சூர்யாகிட்ட வாய்ப்பு வாங்கத்தானே இந்த வீடியோ’னு கேக்கறாங்க. நான் சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். அவர் என்ன சீரியலா தயாரிச்சிட்டிருக்கிறார்? என்னுடைய ஜாதிப் பின்னணியில இருந்து திட்டி எக்கச்சக்க கமென்ட்ஸ். இதுல ஹைலைட் என்னன்னா, சூர்யா சாரை அடிச்சா ஒரு லட்சம் தர்றேன்னு அறிவிச்சவங்க எங்க ஊர்க்காரர்தான். அந்த ஊரைச் சேர்ந்தவனா இருந்துட்டு நான் இப்படிப் பேசினதுல அவங்க கடுப்புல இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன், ஊர்ல இருந்து நண்பர்கள் சிலர் கொஞ்ச நாளைக்கு ஊர்ப்பக்கம் வந்துடாதனு அக்கறையாக் கேட்டுக்கிட்டாங்க. என் மனசுக்குப் பட்டதைப் பேசியிருக்கேன். அதனால எதைப் பத்தியும் கவலை இல்லை என்று கூறியுள்ளார் அருண் ராஜன்.

-விளம்பரம்-
Advertisement