வாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.! பெண் யார் தெரியுமா.!

0
1658
manas
- Advertisement -

சின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி’ சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவருக்குக் கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. மானஸ் சாவலி தன்னுடைய காதலி நீரஜாவைத் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்துஅவரது காதல் மனைவி நீரஜா பேசுகையில் எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு.

- Advertisement -

ரெண்டு பேரும் பயங்கர ஹாப்பியில் இருக்கோம். நிஜமாகவே நம்மளுக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிறோம். எங்களுடைய பெற்றோர்களுக்கு எங்க காதலை எடுத்துச் சொல்லி பெரியவங்க சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் எங்களுடைய திருமணம் நடந்திருக்கு.

மானஸ் - நீரஜா

மானஸ் ரொம்பவே கேரிங்கான பர்சன். அவர் என் லைஃப்ல கிடைச்சது என் பாக்கியம். கிட்டத்தட்ட பத்து வருஷமா காதலிக்கும்போது எப்படி அன்பா இருந்தோமோ அதே மாதிரிதான் இனியும் இருப்போம்’ என்று கூறியுள்ளார் மானஸின் மனைவியான நீரஜா.

-விளம்பரம்-
Advertisement