34 வருடங்களுக்கு பிறகு ஹீரோயினாக களமிறங்கும் விஜயகாந்த் பட நடிகை- யாருன்னு நீங்களே பாருங்க

0
769
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்பதை சாதித்து காட்டியவர் விஜயகாந்த். மேலும், தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ரஜினி-கமல் என இருவருக்கும் மத்தியில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். மேலும், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நல்லவன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வாணி விஸ்வநாத்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை வாணி அவர்கள் 34 வருடங்களுக்கு பிறகு கதாநாயகியாக வலம் வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகை வாணி விஸ்வநாத் கேரளாவை சேர்ந்தவர். இவருடைய தந்தை விஸ்வநாதன் ஒரு ஜோதிடர். திருச்சூரில் 1971இல் வாணி விஸ்வநாத் பிறந்தார். இவர் தன்னுடைய பள்ளிக்கல்வி எல்லாமே சென்னையில் முடித்தார். பின் தன்னுடைய 15 வயதிலேயே சினிமாவில் நுழைந்தார். மேலும், 1986 ஆம் ஆண்டு மண்ணுக்குள் வைரம் என்ற படத்தின் மூலம் வாணி விஸ்வநாத் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் சிவாஜி, சுஜாதா, ராஜேஷ், முரளி என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழில் வாணி நடித்த படங்கள்:

அதற்குப்பிறகு 1988 ஆம் ஆண்டு முன்னணி நடிகரான விஜயகாந்த்தின் நல்லவன் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி விஸ்வநாத் நடித்தார். இந்த படத்தில் விஜய்காந்த் அண்ணன் தம்பியாக நடித்து இருப்பார். இதில் தம்பிக்கு வாணி விஸ்வநாத் ஜோடி ஆவார். இதற்கு பிறகு பூந்தோட்ட காவல்காரன், தாய்மேல்ஆனை, இது எங்கள் நீதி என தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவர் அதற்கு முன்பே மலையாளத்தில் புகழ்பெற நடிகையாக திகழ்ந்தார். அதிலும் இவர் 1995 இல் வெளியான மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் வாணி மிக பிரபலமானார்.

வாணியின் திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து இவர் மம்முட்டி, மோகன்லால் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தார். மேலும், அவருடைய போலீஸ் வேடம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இவர் இயல்பாகவே தற்காப்புக் கலையைக் கற்றவர் என்பதால் அவருடைய படங்களில் சண்டைக் காட்சிகளும் ஆக்சனும் பஞ்சமில்லை. மலையாளத்தில் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தெலுங்கில் தனக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் இவர் அரசியலை கட்சியில் இணைந்தார்.

-விளம்பரம்-

வாணி-பாபுராஜ் திருமணம்:

ஆனால், சினிமாவில் சாதித்த அளவுக்கு அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. பின் இவர் படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் பாபுராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் வில்லனாக மட்டுமில்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சுடும் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வாணி விஸ்வநாத் 34 வருடங்களுக்கு பிறகு கதாநாயகியாக களம் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாணி விஸ்வநாத் நடிக்கும் படம்:

தற்போது வாணி அவர்கள் தி கிரிமினல் லாயர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது. இந்த படம் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதை. இந்த படத்தில் அவரது கணவர் பாபு ராஜ் நடிக்கிறார். மேலும், வாணி அவர்கள் 34 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா உலகில் சாதித்து வருகிறார். பொதுவாகவே பத்து வருடங்கள் நடிகைகள் சினிமாவில் கதாநாயகியாக இருப்பது அபூர்வமான ஒன்று. ஆனால், வாணி அவர்கள் 34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார். இது மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம். இவருடைய படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement