பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் – சொக்கிப்போன ரசிகர்கள்

0
1591
Vanibhojan
- Advertisement -

பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு தான் படம் இருக்கும் ஆனால், விஜயசாந்திக்கு பின்னர் ஒரு கதாநாயகிக்கு பட்ட பெயர் வைக்கப்பட்டது என்றால் அது நயன்தாராவிற்கு தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நயன்தாராவிற்கு லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டமும்இருக்கிறது . ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குசமீபத்தில் நுழைந்துள்ள வாணி போஜன் தன்னைத்தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக் கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.

- Advertisement -

தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவரை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பதும் உண்டு. ஆனால், கடந்த ஆண்டு இவரோ தன்னைத் தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு போட்ட பதிவு கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருந்தது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வணிபோஜனிடன் சின்ன திரை நயன்தாரா என்று அவரை அழைப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘என்னோட சின்னத்திரையில் நடித்தவர்கள் ஆகட்டும். உங்களுக்கே தெரியும் நான் தான் அவங்களுக்கு இன்ஸபிரேஷன் என்று சொல்றாங்க. அதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கு’ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பேலேவிற்கு இன்ப சுற்றுலா சென்று உள்ளார். அங்கே கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இறுதியாக செங்களம் என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார் வாணி போஜன். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பேச்சுலர் படத்தில் நடிக்காத காரணம்:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன் பேச்சுலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு முதலில் வந்தது.ஆனால், இந்த படத்திற்கு நான் செட்டாகுவானா? என்ற யோசனை எனக்கு இருந்தது. காரணம், இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தால் நம்முடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்த படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க தயங்கினேன்.

பேச்சுலர் படம்:

ஆனால், அந்த படத்தில் நான் நடித்திருந்ததால் இயக்குனர் எனக்காக சில காட்சிகளை மாற்றி இருப்பார். எனக்காக எந்த காட்சியும் இயக்குனர் மாற்றக்கூடாது. இதன் காரணமாக தான் நானே படத்தில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பேச்சுலர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.


Advertisement