கோபி சுதாருக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் – காரணம் இதுதான்.

0
2194
gopi
- Advertisement -

யூடியூபில் எப்போதும் ட்ரெண்டாக இருந்து இளம் ரசிகர்களை காரணத்தை சில சேனலகளில் மிக முக்கியமான இரண்டு சேனல் தான், ‘மெட்ராஸ் சென்ட்ரல் மற்றும் ‘எரும் சாணி’. இந்த இரண்டு குரூப் தான் சளிக்காமால் மக்களை என்டர்டெய்ன் செய்து கொண்டுவந்தது. இதில்’மெட்ராஸ் சென்ட்ரல்’ என்னும் யூடியூப் சேனல் தெரியாத ஒருவர் தற்போது இருக்க முடியாது. அந்த அளவிற்கு சமூக வலைதள வாசிகளை தங்கள் யூட்டிப் சேனல் மூலம் கண்ட்ரோல் செய்து வைத்திருந்தனர் ‘கோபி -சசுதாகர்’ இணை.

-விளம்பரம்-

கடந்த சில வருடமாக மெட்ராஸ் சென்ட்ரல் சேனாலுக்காக பல வீடியோக்களை உருவாக்கி பிரபலம் ஆகி வந்தனர் இருவரும். இவர்களது வீடியோக்கள் பெரும்பாலும் அரசியல் கேளிகள் கலந்ததாக இருக்கும். இதனால் பலமுறை இருவருக்கும் கொலை மிரட்டல் வந்ததுள்ளதாக ஏற்னவே கூறியுள்ளனர். இந்த மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் இருந்து வெளியேறி இருவரும் ‘Paridhabangal’ என்னும் இன்னொரு யூடியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்தனர்.

- Advertisement -

மேலும், கோபி மற்றும் சுதாகர் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ரிஜெக்ட் செய்யப்பட்டார்கள் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். அதே போல இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஆனால், தற்போது இவர்களின் பரிதாபங்கள் யூடுயூப் வேற லெவலில் பிரபலமாகி இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் கோபி சுதாகர் போஸ்ட்டருக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர்களின் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடப்பதால் அடித்து வணிகர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாக்டவுன் பரிதாபங்கள் என்ற பெயரில் வீடியோ வெளியிட்ட கோபி சுதாகர், அந்த வீடியோவில் லாக்டவுனை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்று கொள்ளையடிப்பதாக காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement