பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்க சொல்வியான்னு அடிச்சான் – கண்ணில் ரணத்துடன் வனிதா வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.

0
348
- Advertisement -

பிரதீப்பின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக வனிதா ஷாக்கிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதீப் red card விஷயத்தில் பல்வேறு விமர்சனங்கள் இன்னமும் சென்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாயா&கோ தான் பிரதீப்பை திட்டம் போட்டு வெளியில் அனுப்பிவிட்டனர் என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி இருக்க பிரதீப்பின் Red Card விஷயம் குறித்து தனது விமர்சனத்தில் பேசி இருந்த வனிதா ‘யாருக்குமே பயப்படாமல் தங்களுடைய உரிமைக்காக நின்ற அனைவருக்கும் நான் கைதட்டுகிறேன். இதற்காக முயற்சி எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

-விளம்பரம்-

இதற்கு பெயர்தான் நோ மீன்ஸ் நோ. அவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு மோசமான சம்பவத்தால் மனரீதியாக கடுமையாக பாதிப்பட்டு இருக்கிறான். அவன் நிச்சயமாக சாதாரண மனிதர்கள் போல் இல்லை. இந்த உலகத்தில் மனரீதியாக பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.ஆனால், அவர்களுக்கு குடும்பத்தின் அரவணைப்பு கண்டிப்பாக தேவை.

- Advertisement -

விஜய் டிவி ஒரு போட்டியாளரை உள்ளே அனுப்பும் பொழுது எல்லாவிதமான பரிசோதனைகளை செய்துதான் அனுப்புகிறார்கள். அவர்களாலேயே பிரதீப் இடம் இருந்த பிரச்சினை கண்டுபிடிக்கவில்லை என்பது தான் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் அவனுடைய அம்மாவையே ஒரு பொது நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான். இதன் மூலமாகவே அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அவன் செய்வது அவனுக்கே தெரியவில்லை. பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்று இப்படி செய்தவன் நாளை அனைத்து பெண்கள் முன்பு அம்மணமாக நின்று பார்த்துக்கோ, பார்த்துக்கோ, என்னை லவ் பண்ணுங்க என்று எப்படி சொல்லாமல் இருப்பான். அறிவு வேண்டாமா. எல்லா பெண்களும் எங்களுக்கு பிரச்சனைகள் இருக்கிறது என்று பிரதீப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் போது அர்ச்சனா மட்டும் பிரதீப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இது தவறான ஒன்று. அதேபோல் இந்த விஷயத்தில் கமலஹாசனை நான் மிகவும் பாராட்டுகிறேன். அவர் பெண் பாதுகாப்பிற்காக ஒரு தெளிவான எடுத்துக்காட்டை இந்த சமூகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறார். பிரதீப் செய்தது ரொம்ப பெரிய கேவலம். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு தகுதியான ஆளே கிடையாது என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் பிரதீப்பின் ஆதரவாளர் என்று கூறி தன்னை ஒருவர் தாக்கியதாக வனிதா, முகத்தில் காயத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ பிக் பாஸ் விமர்சனத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் தனது தோழி வீட்டிற்கு சென்ற போது கார் பார்க்கிங்கில் ஒருவர் ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்குறீங்களா?’ என கேட்டார். அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றீயா என சொல்லிவிட்டு என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார். ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. பின் என் தோழியை வரவைத்து மருத்துவமனைக்கு சென்றேன் என்றும் நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன் . பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே. என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்றும் கூறியுள்ளார்.

Advertisement