சாகுறதுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னாடி என்னையும், வக்கீலையும் அழைத்து என் அம்மா இப்படி சொன்னார் – வனிதா சொன்ன உண்மை.

0
957
vanitha
- Advertisement -

நடிகை மஞ்சுளாவின் இறுதி நிமிடங்கள் குறித்து வனிதா விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

- Advertisement -

வனிதா திரைப்பயணம்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

வனிதா அளித்த பேட்டி:

சொல்லப்போனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் வனிதா அவர்கள் ஷகிலாவின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னைக் குறித்த பல ரகசியங்களை கூறியிருக்கிறார். அப்போது தன்னுடைய தாய் மஞ்சுளா குறித்து கூறியிருந்தது, ஏர்போர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு என்னை என்னுடைய அம்மா மஞ்சுளா வீட்டிற்கு வரச் சொன்னார். வீட்டிற்கு சென்று நான் என்னுடைய தந்தையின் காலில் விழுது அழுது மன்னிப்பு கேட்டேன். அதற்கு பின் ஆலப்பாக்கம் வீட்டின் மாடியில் என்னுடைய அம்மா இருந்தார்.

மஞ்சுளாவின் இறுதி நிமிடங்கள்:

நான் அதே வீட்டில் கீழ் தளத்தில் என் மகன், மகள்களோடு இருந்தேன். என்னுடைய அம்மாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது. அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலையும் வந்திருக்கிறது. என்னுடன் அவர் இருக்கும் போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. ஒரு நாள் அவர் தான் 72 மணி நேரத்தில் இறந்து விடுவோம் என்ற சூழ்நிலையில் இருந்த போது அவர் என்னிடம் சில விஷயங்களை சொன்னார். மேலும், இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். பின் என்னுடைய தந்தை விஜயகுமாரிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று சொன்னார்.

சொத்து குறித்து சொன்னது:

அதற்குப்பின் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். ஆனால், அவருடைய இறுதி சடங்கை கூட செய்ய என்னை அனுமதிக்கவில்லை. பின் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை முன்னாள் அழைத்து இறுதி சடங்குகளை செய்ய வைத்தனர். அவர்கள் இல்லை என்றால் என்னுடைய அம்மாவிற்கு என்னால் இறுதி சடங்கு கூட செய்திருக்க முடியாது. தற்போது அந்த வீட்டை என்னுடைய அம்மா ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவிக்கு எழுதி வைத்துவிட்டதாக கூறுகின்றனர். எனக்கு இந்த சொத்தில் உரிமை இல்லை என்று மஞ்சுளா எழுதி வைத்துவிட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய தாயாரின் கையெழுத்தை மாற்றி போலி பத்திரம் செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அதை என்னால் நிரூபிக்கவும் முடியும். ஆனால், நான் செய்யவில்லை. காரணம், பிரீத்தாவும், ஸ்ரீதேவியும் என்னுடைய தங்கைகள் தான். நான் அந்த சொத்தில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். சொத்து பிரித்தால் அவர்களுக்கும் அது போய் சேரட்டும் இதுவே என்னுடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement