பீட்டர் பால் பற்றி னிதா விஜயகுமார் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், இடையில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.

தற்போது வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி சொந்த பிசினஸ், யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வனிதா குறித்த தகவல்:
இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸ்டர் & மிஸஸ் ‘ என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை சகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.

வனிதா பேட்டி:
இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருக்கிறார். மேலும், நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் ப்ரோமோஷனின் போது அளித்த பேட்டியில் வனிதா பீட்டர் பால் பற்றி கூறியிருப்பது, நம்ம உலகமே ஒருத்தர் நல்லா இருந்தாங்கன்னா, அதை எப்படி கெடுக்கலாம் என்று பார்ப்பாங்க.
View this post on Instagram
பீட்டர் பால் பற்றி சொன்னது:
நல்லா இருந்தா ஐயோ பாவம் இப்படி இருந்திருக்கலாமே என்று சொல்லுவாங்க. இப்படிதான் நடக்கணும்னு இருந்திருக்கு அதை யாராலும் மாத்த முடியாது. ஒருத்தருடைய இறப்பும் பிறப்பும் யாராலும் மாற்ற முடியாது. என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் பீட்டர் பால் இருக்கணும்னு இருந்திருக்கு. அதனால் கிட்டத்தட்ட சில மாதங்கள் என்கூடஇருந்தாரு. அவரை என்கிட்ட அனுப்பிய கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடைய உயிரை இரண்டு முறை காப்பாற்றினேன். என்னால் பண்ண முடிந்தது மத்தவங்களால பண்ண முடியல என்பதுதான் என் வருத்தம் என்று கூறி இருக்கிறார்.

வனிதா திருமணம்:
இதற்கிடையில் நடிகை வனிதா அவர்கள் நடிகர் ஆகாஷை திருமணம் செய்திருந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்கள். அதற்குப்பின் வனிதா தன்னுடைய குடும்பத்துடன் சண்டை போட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பின் இவர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து இருந்தார். ஆனால், இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு பின் இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து இருந்தார். அதற்குப்பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துமே விட்டார்கள். அதோடு கடந்த ஆண்டு பீட்டர் பால் உடல்நல குறைவால் இறந்தும் விட்டார்.






