தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை இவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண், ஆர்த்தி கணேஷ், கணேஷ், தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஷகிலாவின் மகள் தான் வனிதா. இவர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்கிறார். ராபர்ட் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், எல்லோருமே வனிதாவை குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையை வேஸ்ட் என்று வனிதாவிற்கு நெருக்கமானவர்கள் எல்லோருமே சொல்கிறார்கள். அப்போது வனிதாவிற்கு 40 வயது ஆகிவிடுகிறது.
இருந்தாலுமே தனக்கு குழந்தை வேண்டும் என்று வனிதா அடம்பிடிக்கிறார். அவருடைய கணவர் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். ராபர்ட் ஏன் குழந்தை வேண்டாம் என்கிறார்? வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. ஒரு பெண்ணின் உளவியலை ரொம்ப யதார்த்தமான புரிதலோடு வனிதா கையாண்டு இருக்கிறார்.

அடல் காமெடி ஜானரில் இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஆங்கில மொழிக்கு செட் ஆகியிருக்கும். ஆனால், நம்முடைய கலாச்சாரத்திற்கு கேள்வி குறி தான். அணியும் உடை, பேசும் பேச்சு என எல்லாத்தையுமே வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்கிறார் வனிதா. சொல்லப்போனால், கொரியன் டிராமாவை பார்ப்பது போல தான் இருந்தது. கதைக்களம் வித்தியாசமாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் வனிதா கோட்டை தான் விட்டிருக்கிறார்.
நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் யார்? என்ன ரோல்? என்று எதுவுமே தெரியவில்லை. வனிதாவுமே கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தான் நடித்திருக்கிறார். படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கருத்தும் சுவாரசியமே இல்லை. ஸ்ரீகாந்த் உடைய பாடல்களும் சும்மா தான். ஒளிப்பதிவு எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியாகவும் வனிதா நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். இது முழுக்க முழுக்க 18 பிளஸ் பார்க்கும் படமாக தான் இருக்கிறது. குழந்தைகள் இந்த படத்தை பார்க்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு கேவலமான படமாக படம் என்று சொல்லலாம்.

நிறை:
வித்தியாசமான கதை
நடிகர்கள் ஓகே
பின்னணி இசை சுமார்
மற்றபடி பெரிதாக ஒன்னும் இல்லை
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் வனிதா நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
பாடல்கள் பெரிதாக இல்லை
எடிட்டிங் ஒளிப்பதிவு எல்லாமே மொக்கையாக இருக்கிறது
ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை
மொத்தத்தில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் - சொதப்பல்






