தன்னுடைய தந்தையின் திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நடிகை வனிதா சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். பின் இவர் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார். பின் நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வனிதா விஜயகுமார் குறித்த தகவல்:
கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார். அதுமட்டுமில்லாமல் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா:
இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் டைட்டிலை அவர் வெல்லா விட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் வனிதாவுக்கு குவிந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பிரசாந்த் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த ‘அந்தகன் ‘ திரைப்படத்தில் முக்கியமான ரோலில் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இதை தொடர்ந்து வனிதா நடிப்பில் சில படங்கள் வெளியாக இருக்கிறது.
வனிதா பேட்டி:
தற்போது இவர் ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா, நான் இதை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என தெரியாது. நாங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அங்கு பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் தான். ஏன் இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அப்பா விஜயகுமாருக்கும் இரண்டு மனைவிதான்.

விஜயகுமார் திருமணம் குறித்து சொன்னது:
அதை நீங்கள் லீகல் என்று சொன்னாலும் சரி, இல்லீகல் என்று சொன்னாலும் சரி, அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி தான் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருப்பது தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சிலர், என்ன தான் தந்தையுடன் சண்டையாக இருந்தாலும் பொதுவெளியில் அவரை பற்றி வனிதா தவறாக பேச வேண்டாம் என்றெல்லாம் அறிவுரை கூறி வருகிறார்கள். மேலும், விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






