திரிஷாக்கு கிட்டத்தட்ட என் வயசு தான், ஐஸ்வர்யா ராய அப்படி காமிக்க ட்ரை பண்ணி இருக்காங்க அது நல்லா இல்ல

0
1085
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் இதை தவிர்த்திருக்கலாம் என்று வனிதா விஜயகுமார் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படம் பார்த்து பிரபலங்கள் ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து வனிதா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வனிதா அளித்த பேட்டி:

அதாவது, பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு வந்த பிறகு வனிதாவிடம் செய்தியாளர்கள் படத்தை குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், படம் நன்றாக இருக்கிறது. எதிர்பார்த்ததை சரியாக பூர்த்தி செய்து இருக்கிறது. மணிரத்தினம் சார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இது ஒரு வரலாறு என்று சொல்லலாம். திரிஷா ரொம்ப அழகாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் குறித்து சொன்னது:

வந்திய தேவன் நடிப்பும் சூப்பர். ஆனால், ஒரு சின்ன மன வருத்தம் தான். ஐஸ்வர்யா ராயை அப்படியே காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும். அவரை இளமையாக காண்பிக்க வேண்டும் என்று மேக்கப் எல்லாம் அதிகமாகவே போட்டு விட்டார்கள். ஊமை ராணி கதாபாத்திரத்தில் அவர் அழகாக இருந்தார். ஆனால், நந்தினி கதாபாத்திரத்தில் தான் கொஞ்சம் செயற்கையாக இருந்தது. அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அதேபோல் நான் உண்மையிலேயே ஐஸ்வர்யா ராய் ரசிகை என்று கூறியிருந்தார்.

Advertisement