விஜய் அரசியல் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.
வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார். விஜயகுமார் குடும்பம் வனிதாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா வாழ்க்கை மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வனிதா குறித்த தகவல்:
இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்து செய்தியாளர்கள் சந்திப்பில், என் அப்பாவுடைய சொந்த ஊரே தஞ்சாவூர் தான். இங்கு தான் என்னுடைய அப்பாவின் வாழ்க்கை ஆரம்பித்தது.
வனிதா பேட்டி:
இருந்தாலுமே, நான் இதுவரை தஞ்சாவூர் கோவிலுக்கு வந்ததே கிடையாது. இதுதான் முதல் முறை. அப்பா நிறைய இந்த கோவிலைப்பற்றி சொல்லி இருக்கிறார் என்று கூறியிருந்தார். உடனே செய்தியாளர் ஒருவர், விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு வனிதா, விஜய் அரசியலுக்கு வருவது என்று மிகப் பெரிய மிகப்பெரிய பரிமாணத்தை எடுத்து இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் அரசியல் குறித்து சொன்னது:
கண்டிப்பாக விஜய் பெரிய வெற்றியை அடையணும். விஜய்யும், உதயநிதியும் சினிமாவில் இருந்து தான் வந்தார்கள். தற்போது இரண்டு பேருமே எதிரிகள் போல இருக்கிறார்கள். விஜய்- உதயநிதி இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். அதனால் நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் அவர்களை ஆதரிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய் அரசியல்:
விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதற்கு பின்பு தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதில் வாகை மலரும், இரு பக்கம் யானையும் இருந்தது. அதற்குப்பின் சமீபத்தில் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இருந்தார் விஜய். இதற்கு பலருமே பாராட்டி வாழ்த்தியிருந்தார்கள். தற்போது விஜய்னுடைய அரசியல் பயணம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.