அப்போ ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாம் – வனிதா விஜயகுமாரை கலாய்த்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

0
408
- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தங்களுக்கு திருமணம் ஆகி விட்டதாக வந்த வதந்திகள் குறித்து நகைச்சுவையாக பதில் அளித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் சினிமாவில் சில படங்களில் வனிதா நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் வனிதா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இதை அடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில்’ வனிதா கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் மூலம் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

- Advertisement -

வனிதா குறித்து :

அதை தொடர்ந்து வனிதா பல டிவி ஷோக்கலில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் எதையாவது ஒன்று செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் பங்கு பெற்று இருந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.

பிக்கப் போஸ்டர்:

அந்த விழாவில் தங்கள் இருவரையும் இணைத்து வந்த வதந்திகளுக்கு பவர் ஸ்டாரும் வனிதாவும் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளனர். அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு பவர் ஸ்டார் மற்றும் வனிதா விஜயகுமார் இணைந்து நடித்த ‘பிக்கப்’ படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில், இருவரும் திருமண கோலத்தில் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்ளும் வகையில் போஸ்டர் இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

-விளம்பரம்-

வனிதா பேசியது:

தற்போது டீசர் வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார் மேடையில் பேசும்போது, என் தோழி வனிதா விஜயகுமாரை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது என்று சொன்னார். உடனே வனிதா, தோழியா? உங்களுக்கும் எனக்கும் கல்யாணமே பண்ணி வச்சுட்டாங்க. ஆந்திராவுக்கு போனா, நீங்க பவர் ஸ்டார் பவன் கல்யாண் திருமணம் செய்து விட்டீர்களா என கேட்கிறார்கள். அதற்கு நான் இல்லை, நான் தமிழ்நாட்டு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை தான் திருமணம் செய்து இருக்கேன் என்று கூறி வருகிறேன்.

பவர் ஸ்டாரின் பதில்:

பின், உங்களை கல்யாணம் பண்ண நேரம் ஒன்னும் நடக்கவில்லை என வனிதா நகைச்சுவையோடு கூறினார். அதற்கு பவர் ஸ்டார், என்ன பண்றது டைம் இல்லையே. நீங்க வேற அடிக்கடி தாய்லாந்து போயிடுறீங்க. நானும் இங்கு இல்லை. ‘இருங்க இப்ப ஒரு நாள் ஹனிமூன்க்கு குறச்சிடலாம்’ என்று வனிதாவுக்கு பதிலளித்தார். இவர்கள் இருவரின் உரையாடலை கேட்டு அரங்கமே சிரித்தது. தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement