பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷின் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். இவர் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்த வனிதா விஜயகுமார், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் என்பவர் வேறு யாருமில்லை, ‘சமுத்திரம்’ படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரே அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின், வனிதா விஜயகுமார்- ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த கையோடு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.
வனிதா விஜயகுமார் – ஆகாஷ்:
நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர், தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார் ஆகாஷ். இதை அடுத்து மகள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, வேறு திருமணம் கூட செய்யமால் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய் ஸ்ரீஹரி குறித்து:
மேலும் தந்தையுடன் வளரும் ஸ்ரீஹரி, தனது தாத்தா விஜயகுமார் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்து இருக்கிறார். தற்போது ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹேசல் சைனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
விஜய் ஸ்ரீ ஹரி நடிக்கும் படம்:
மேலும், சிங்கத்தை மையமாக வைத்து இபபடத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு Mambo என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமார், தனது பேரன் ஸ்ரீஹரி குறித்து பல விஷயங்கள் பெருமையாக பேசி இருந்தார். இந்த விழாவில் விஜய் ஸ்ரீஹரியின் தந்தை ஆகாஷு ம் கலந்து கொண்டிருக்கிறார்.
ஆகாஷ் வீடியோ:
தற்போது, அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், வனிதா அழகான வாழ்க்கையை தொலைத்து விட்டார். வனிதாவுடன் விவாகரத்திற்கு பிறகும் கூட திருமணம் செய்யாமல் தனது மகனுக்காக ஆகாஷ் வாழ்கிறார். நீங்கள்தான் உலகத்தில் சிறந்த தந்தை என்று ஆகாஷுக்கு ஆதரவாகவும், வனிதா விஜயகுமாருக்கு எதிராகவும் பதிவிட்டு வருகிறார்கள்.