பிரபல இயக்குனர் பிரபு சாலமன் தனது மகளை வைத்து இயக்கும் புதிய படத்தில், ஹீரோவாக வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி நடிக்கிறார் என்ற செய்தி தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் திரைப்பட துறையில் பிரபு சாலமன் ஒரு புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி என்னும் இடத்தில் பிறந்த இவர், ‘காதல் கோட்டை’ திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் ‘அகத்தியன்’ அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
மேலும், கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, லாடம், மைனா, கும்கி, செம்பி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். பிரபு சாலமனுக்கு தனது சினிமா பயணத்தில் ‘மைனா’ படம் திருப்புமுனையாக இருந்தது. அந்தப் படத்தின் பட்ஜெட் ரூபாய் 2 கோடியாக இருந்தாலும், பாக்ஸ் ஆபீசில் ரூபாய் 14 கோடி வரை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரி அறிமுகம் :
தற்போது பிரபு சாலமன் வனிதா விஜயகுமாரின் மகன் ‘விஜய் ஸ்ரீஹரி’யை வைத்து படம் இயக்குகிறார். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், படத்தில் தன் மகள் ‘ஹசேல் ஷைனி’ யை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். ஏற்கனவே, சமூக வலைதளங்களில் வைரலானவர் பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி. படத்தின் வேலைகள் தொடங்கிவிட்ட சூழலில், படத்துக்காக சில பயிற்சிகள் பெற வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று வந்தாராம் விஜய் ஸ்ரீ ஹரி.
ஸ்ரீஹரின் தந்தை ஆகாஷ் :
மேலும், விஜய் ஸ்ரீ ஹரிக்கு இப்போது 25 வயது தாண்டிய நிலையில், அவருக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவில் நடிக்கிற ஆர்வம் இருந்ததாம். இதுதான் சினிமாவில் நுழைவதற்கு சரியான சூழல் என, தனது பையன் விருப்பத்திற்கு எப்பவுமே மறுப்பு தெரிவிக்க மாட்டாராம் அவரது அப்பா ஆகாஷ். அதனைத் தொடர்ந்து ஸ்ரீஹரிக்கு சினிமா வாய்ப்புகள் சில ஆண்டுகளாகவே வந்துட்டு இருந்த நிலையில், பெரிய பேனர் அல்லது முன்னணி இயக்குனர்கள் மூலமாக தனது மகன் அறிமுகமான நல்லா இருக்கும்னு ஸ்ரீஹரியின் தந்தை ஆகாஷ் நினைத்தாராம்.
படம் தொடங்கியது :
அதனைத் தொடர்ந்து ஸ்ரீஹரியின் அப்பா நினைத்தது போலவே இயக்குனர் பிரபு சாலமன் ஒரு கதைக்காக புது முகத்தை தேடி வந்த நிலையில், அந்தப் புதுமுகம் விஜய் ஸ்ரீஹரியாக மாறிவிட்டார். கதைக்குப் பொருத்தமான ஹீரோவாக விஜய் ஸ்ரீ ஹரி அமைந்த நிலையில், படத்தின் வேலைகள் உடனடியாக தொடங்கப்பட்டு விட்டன என்ற செய்திகள் வந்துள்ளன.
கும்கி போன்ற படமாம் :
ஏற்கனவே பிரபு சாலமன் இயக்கிய படங்களில் அறிமுகமான நடிகர் கரண், நடிகை அமலா பால் போன்றோருக்கும், ‘கும்கி’ நடிகர் விக்ரம் பிரபுவுக்கும் நல்லதொரு பெயரை தந்தது என்ன சொல்லலாம். அது போல் விஜய் ஸ்ரீ ஹரையும் வைத்து இயக்கும் புதிய படமும், கும்கி ஸ்டைலில் அமைந்த ஒரு கதையாம். யானைக்கு பதில் சிங்கம் படத்தில் இடம்பெறுகிறதாம். படத்தில் நடிக்கவிருக்கும் சிங்கத்திற்கும், அதனுடன் நடிக்கும் ஸ்ரீஹரிக்கும் விசேஷப் பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.