பவன் கல்யாண்-பவர் ஸ்டார் சர்ச்சைக்கு வனிதா கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் வாழ்க்கை மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.
அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த அந்தகன் படத்தில் வனிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
வைஜெயந்தி ஐபிஎஸ் படம்:
இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் நடித்திருக்கும் வைஜெயந்தி ஐபிஎஸ். இந்த படத்தில் சங்கர் கணேஷ், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜி இயக்கி இருக்கிறார். ஜென் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் திரைக்கு வெளிவர இருக்கிறது.
ரசிகர்கள் கேள்வி:
இந்த நிலையில் சமீபத்தில் தான் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், என்னுடைய தோழி வனிதா விஜயகுமாரை சந்தித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றெல்லாம் பேசியிருந்தார். உடனே அங்கிருந்த பத்திரிகையாளர்கள், வனிதா உங்களுக்கு தோழியா? உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களே? என்று கேட்டு இருக்கிறார்கள். உடனே வனிதா, ஆந்திராவில் நீங்க பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்து விட்டீர்களா? என்று கேட்கிறார்கள்.
பவர் ஸ்டார் சீனிவாசன் குறித்து சொன்னது :
அதற்கு நான், தமிழ்நாடு பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னதாக ஜாலியாக வனிதா பேசியிருந்தார். இப்படி அவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. வனிதா அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
வனிதா திருமணம் :
அதன் பின் வனிதா-ஆனந்த் ஜெயராம் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்தார். அந்த திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வெடித்த உடன் 2012ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தார்கள். அதன் பின் இவர் ராபர்ட் மாஸ்டருடன் லிவிங்கில் வாழ்ந்து வந்தார். அதனை அடுத்து இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து இருந்தார். திருமணம் ஆன சில வாரங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது வனிதா சிங்கிளாக தான் இருக்கிறார்.