நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று (ஜனவரி 27)வெளியாகியிருந்தது.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகிவரும் இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. இந்த ட்ரைலர் எந்த ரசிகர்களை கவர்ந்துள்ளதா இல்லையா என்று பிரபல சினி ட்ராக்கர் ஒருவர் வாக்கு பதிவு ஒன்றை நடத்திலுள்ளார்.
அதில் 47 சதவீதம் ஆம் என்றும் மீதமுள்ள 53 சதவீதம் பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர். ட்ரைலருக்கே இந்த கதி என்றால் இன்னும் படம் வந்தால் சிம்பு சொன்னதை போல பால் ஊற்றிவிடுவார்கள் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.