இந்த ஆண்டு இந்த விஷயத்தில் நயன்,திரிஷாவையே மிஞ்சிய வரலக்ஷ்மி – டாப் 5 லிஸ்ட் இதோ

0
262
- Advertisement -

2023 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிகம் நடித்த நடிகைகளின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் 2023 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. இதனால் இந்த வருடத்திற்கான படங்களின் ரிலீசும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

நடிகை வரலட்சுமி சரத்குமார்:

அதில் முதல் இடத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் பிடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

மேலும், இவருடைய நடிப்பில் இந்த வருடம் தமிழில் வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. அடுத்த வருடம் இவர் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

mahima

மகிமா நம்பியார்:

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் மஹிமா நம்பியார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் தனது 15 வயதிலேயே மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த வருடம் இவருடைய நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழில் சந்திரமுகி 2, ரத்தம், 800, நாடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதில் தமிழில் இவர் நடிப்பில் வந்த படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக, சந்திரமுகி 2 படம் இவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கி தரவில்லை. மலையாளத்தில் வெளியான ஆர் டி எக்ஸ் என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து வாலாட்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.

sruthi

ஸ்ருதிஹாசன்:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இந்த வருடம் இவருடைய நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா திரிஷா :

இவர்களைத் தொடர்ந்து இந்த வருடம் நயன்தாரா, திரிஷா ஆகியோர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது
சமந்தா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது.

Advertisement