காவித் தலைப்பாகையுடன் கூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

0
607
- Advertisement -

நாகூர் தர்காவுக்கு காவி தலைப்பாகையுடன் ஏ ஆர் ரகுமான் சென்றிருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற தர்காவில் ஒன்று நாகூர் தர்கா. தற்போது இந்த நாகூர் தர்காவின் 467வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்று இருக்கிறது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தான் கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு வருடம் வருடம் பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டிருந்தார். அவருக்கு மரியாதை செலுத்தி சிறப்பாக வரவேற்று இருந்தார்கள். பின் ஆளுநர், உயரிய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை பழமை வாய்ந்ததாக இந்த தர்கா பிரதிபலிக்கிறது. 467 வது கந்தூரி விழாவில் பங்கேற்றதில் சந்தோஷம் அடைகிறேன் என்றெல்லாம் தர்காவின் குறிப்பேட்டில் எழுதி இருக்கிறார்

- Advertisement -

ஆளுநர் வருகை:

இதை அடுத்து தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்சாம் புயலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு இருக்கிறார்கள். இதிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்ததாகவும் ஆளுநர் கூறியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர்கள் அனைவருமே ஆளுநர்கள் வருகைக்கு கருப்புகொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

நாகூர் தர்காவின் கந்தூரி விழா:

இந்த நிலையில் நாகூர் தர்காவின் கந்தூரி விழாவிற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டிருக்கிறார். இவர் எளிமையாக ஆட்டோவில் வந்திறங்கி இருக்கிறார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தர்காக்குள் பலத்த பாதுகாப்புடன் ஏ ஆர் ரகுமானை அழைத்து சென்று இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரகுமான் அவர்கள் காவி தலைப்பாகையுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

நாகூர் தர்காவில் ஏ ஆர் ரகுமான்:

இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மேலும், நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் விழாவில் ஏ ஆர் ரகுமான் கலந்திருக்கிறார். இதே போல்தான் கடந்த ஆண்டும் கந்தூரி விழாவில் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு இருந்தார். ஏ ஆர் ரகுமான் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர். குறிப்பாக, நாகூர் தர்கா மீது அவர் அதிகமான நம்பிக்கையை வைக்கிறார். அதனால் தான் இவர் அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஏ. ஆர். ரகுமான் திரைப்பயணம்:

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், கவர்ந்தவர். கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியிருக்கும் படம் பிப்பா. இந்த படத்தில் மிருணாள் தாக்குர், இஷான் கட்டர் நடித்திருக்கிறார்கள்.

Advertisement