விஜய் 62-இல் இணைந்த நடிகை ! யார்..? என்ன கதாப்பாத்திரம் தெரியுமா – கசிந்த தகவல் !

0
1173
Vijay 62

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார்.ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது.

varalakshmi

இந்த படத்தில் விஜயுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைய போவதாக தகவல்கள் ஏற்கனவே வந்திருந்த நிலையில் அது சரத் குமாரின் மகள் வரலட்சுமி என்று சில மாதங்க்கு முன்னர் உறுதியானது.மேலும் விஜயின் 62 படம் ஒரு அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்கும் என்பது ஏற்கனவே அறிந்த ஒரு விஷயம் தான்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வரலட்சுமிக்கும் அரசியல் சம்மந்தபட்ட கதாபாத்திரத்தில் தான் நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொடி படத்தில் நடித்த திரிஷா போன்று ஒரு வில்லத்தனம் கலந்த ஒரு நடிகையாக நடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளிவருகின்றன.தாரை தப்பட்டை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வரலட்சுமிக்கு இந்த கதாபாத்திரமும் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது