வரலட்சுமி திருமண ‘மெஹந்தி’ நிகழ்ச்சியில் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா

0
51
- Advertisement -

வரலட்சுமி சரத்குமாரின் மெஹந்தி பங்க்ஷனில் சரத்குமார்- ராதிகா போட்டிருக்கும் குத்தாட்டம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மார்ச் மாதம் வரலக்ஷ்மிக்கும் நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருந்தார்கள். நிக்கோலை சச்தேவ் ஒரு gallarist , இவர் Gallery 7 என்ற கண்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

- Advertisement -

நிக்கோலாய்- வரலக்ஷ்மி குறித்த தகவல்:

வரலக்ஷ்மியையும் நிக்கோலை சச்தேவ்வும் 14 ஆண்டுகள் பழகி வந்துள்ளனர். இரு வீட்டார் சம்மத்ததுடன் மீகவும் எளிமையாக நிச்சயதார்தம் முடிந்துள்ளது. அதோடு நிக்கோலேவுக்கு ஏற்கனவே கவிதா என்ற மாடல் அழகியுடன் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகளே இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கவிதாவை பிரிந்து இருக்கிறார் நிக்கோலை. இப்படி விவகாரத்து ஆனவரை வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்வதற்கு விமர்சனங்கள் எழுந்தது.

திருமணம் குறித்த தகவல்:

அதற்கு இவர் பதிலடி கொடுத்து இருந்தார். மேலும், நிச்சயதார்த்தம் எளிமையில் முடிந்தாலும் திருமணத்தை கோலாகலமாக நடத்த வரலட்சுமி சரத்குமார் திட்டமிட்டிருந்தார். அதற்கு ஏற்ப கோலிவுட், பாலிவுட், டோலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை கொடுத்து வரலட்சுமி சரத்குமார் குடும்பத்துடன் வரவேற்று இருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

மெஹந்தி பங்க்ஷன்:

இந்த நிலையில் நேற்று இவர்களுடைய வரலட்சுமி-நிக்கோலாய் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்றிருக்கிறது இதில் எல்லோருமே பச்சை நிற தீமில் ஆடைகளை அணிவித்து மெஹந்தி போட்டு சிறப்பாக நடனமும் ஆடி இருந்தார்கள். குறிப்பாக, இந்த மெஹந்தி பங்க்ஷனில் நடிகை ராதிகா, சரத்குமார் இருவரும் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரலக்ஷ்மி திருமணம்:

இவர்கள் இருவரும் இளம்வயது ஜோடி போலவே துள்ளி குதித்து நடனமாடி இருக்கிறார்கள். இன்று வரலட்சுமி- நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற இருந்தப்பதால் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடபாக சரத்குமார் பத்திரிகையாள்களுக்கு புகைப்படங்கள் விரைவில் உங்களை வந்து சேரும் என்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement