கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் தான் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா அவர்கள் திடீரென்று மரணம் அடைந்துள்ளார். இந்த தகவல் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை மேக்னா ராஜ் மற்றும் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். நேற்று (ஜூன் 6) சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை
நடிகர் சிரஞ்சீவி சர்ஜா அநியாயமாக மரணம் அடைந்தார். தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. இதில் சோகமான விஷயம் என்னவெனில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கிறார். முதல் குழந்தையை பார்ப்பதற்கு முன்பாக அவரது கணவர் இறந்து விட்டார். சிரஞ்சீவி சார்ஜாவின் மரண செய்தி அறிந்ததும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இவரின் இறுதிச் சடங்கு இன்று(ஜூன் 8) கனகபுராவில் இருக்கும் பண்ணை வீட்டில் நடைபெறுகிறது. அவரின் உடலை பண்ணை வீட்டு தோட்டத்தில் புதைத்தால் சிரஞ்சீவி எப்பொழுதும் தங்களுடனேயே இருப்பது போன்று இருக்கும் என்பதால் குடும்பத்தார் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்களாம். சிரஞ்சீவின் இறுதி சடங்கில் நடிகர் அர்ஜுன் கண்ணீர் விட்டு அழுத புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.