இந்த மாதிரி ரசிகர எல்லாம் தளபதியே விரும்ப மாட்டாரு – Varisu Audio Launch பவுன்சர்கள் சொன்ன உண்மை.

0
852
vijay
- Advertisement -

விஜய்யின் வாரிசு இசை வெளியிட்டு விழாவின் போது ரசிகர் ஒருவரை அங்கு பாதுகாப்பிற்காக இருந்த பவுன்சர்கள் அடித்து இழுத்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் அந்த ரசிகரை ஏன் இழுத்து சென்றோம் என்று பவுன்சர்கள் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளனர். வரும் பொங்கலுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரண்டு பொங்கல் பரிசாக வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

-விளம்பரம்-
vijay

இந்த நிலையில் இரு படகுழுவினரும் அவர்களது படத்தை ப்ரோமோஷன் செய்வதற்கு பல விஷியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் நேரு உள்அரங்கில் நடந்தது. அந்த விழாவில் படக்குழுவினரும் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். மேலும் விஜய் இரண்டு வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பதினால் விஜய்யை காணவும் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்கவும் பல ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர்.

- Advertisement -

40 ஆயிரம் பேர் அமரும் அந்த அரங்கு ஏற்கனவே நிரம்பி வழிந்த நிலையில் விஜய்யை காண பல ரசிகர்கள் தொடர்ந்து வந்தபடியாக இருந்தனர். இந்த நிலையில் விழா நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் பவுன்சர்களை போல உடை அணிந்து நடிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அது சோசியல் மீடியாவில் வைரலாகியது. மேலும் இந்த நிகழ்வுக்கு பின்னர் மற்றொரு ரசிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நோக்கில் வந்தபோது அவரை பாதுகாப்பிற்காக இருந்த பவுன்சர்கள் அடித்து இழுத்து செல்லும் வீடியோ வைரலாக நிலையில் பாலரும் விஜய் ரசிகர்களை பவுன்சர்கள் அடித்ததாக கண்டணங்களை கூறிவந்தனர்.

இந்த நிலையில்தான் தற்போது ரசிகரை இழுத்து சென்ற மூன்று பவுன்சர்களும் ஒரு பேட்டியில் அவர்கள் எதற்காக அப்படி செய்தார்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தனர். அந்த பேட்டியில் கூறியது `நாங்களே கஷ்டத்தில் தான் இந்த வேலைக்கு வந்திருக்கிறோம் அந்த அரங்கத்தில் அத்தனை பேர் இருக்கும் போது விஜய் ரசிகர் ஒருவர் எங்களை போல உடை அணிந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது அவர் பிரபலம் கிடைப்பதற்காக செய்தாலும் எங்களுடைய பொழப்பில் மண்ணை அல்லி போடும் படியாக அது இருந்தது.

-விளம்பரம்-

அவ்வளவு பெரிய விழாவில் இப்படி ஒருவர் பவுன்சர் சட்டை போட்டுகொன்டு புகைப்படம் எடுத்தினால் எங்களை விழா குழுவினர் கடுமையாக திட்டினார்கள், 200 பேர் இருந்தும் எண்ணத்தை “புடுங்கிட்டு இருந்தீகிக்க” என்று மிகவும் கடுமையாக திட்டினார்கள். அது எங்களுக்கு மானவருத்தமாக இருந்தது. எந்த ஒரு உண்மையான தளபதி ரசிகனும் இப்படி செய்ய மாட்டார்கள் அதை தளபதி விஜய்யும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த நிகழ்வு நடந்த பிறகு மற்றொரு ரசிகர் அங்கு நின்றவர்களின் காலுக்குள் புகுந்து புகைப்படம் எடுக்க சென்றார்.

நாங்கள் அப்போதுதான் திட்டு வாங்கிவிட்டு வருகிறோம், அதோடு அங்கே பல பிரபலங்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். எனவே அவரை வேகமாக அழைத்து செல்வதை தவிர வேறு வழியில்லை. மேலும் நாங்கள் அவரை அழைத்து சென்ற பிறகும் கூட பொறுமையாக்கத்தான் அவருக்கு எடுத்து கூறினோம். அந்த ரசிகர் ஏற்க்கனவே பிஸ்ட் படத்தின் போது விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் நண்பர்களுடன் பந்தயம் போட்டு மீண்டும் புகைப்படம் எடுக்க வந்ததாக அவரை விசாரணை செய்யும்போது கூறினார். அப்போது கூட நாங்கள் உங்களுடைய பிரபலத்திற்கு எங்களுடைய பொழப்பில் மண்ணை போடாதீர்கள் என்றுதான் கூறி அனுப்பி வைத்தோம் என்று அந்த மூன்று பவுன்சர்களும் கூறினர்.

Advertisement