என்னது 7 நாள்ல இத்தனை கோடியா ? வட சுடுறீங்களா – வாரிசு வசூலை கேலி செய்த துணிவு தயாரிப்பாளர்.

0
555
varisu
- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

கொண்டாட்டங்கள் :

அஜித் மற்றும் விஜய் படங்கள் 8 வருடங்கள் கழித்து இருவரது திரைப்படங்களும் ஒன்றாக வெளியாவதினால் சோசியல் மீடியாவில் சரி, வெளியிலும் சரி பல சண்டைகளும் ஏற்பட்டன. திரையரங்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணனடிகள் உடைக்கப்பட்டன போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயற்சி செய்த்தனர். இதனால் அந்த இடங்கள் முக்குவதும் கலவர பூமியாக காட்சியளித்து. ரோகினி திரையரங்கம் இந்த மோதலில் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு வாரிசு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் வாரிசு விநியோகஸ்த்தர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சோசியல் மீடியாக்களில் அறிவித்தனர். இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயில் ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது..

வெற்றி விழா :

இந்த நிலையில் தான் வாரிசு படம் 5 நாட்களில் 150 கோடியை வசூல் செய்துள்ளது நம்பா என்று அதிகாரப்பூர்ப அறிவிப்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் விஜய் நேற்று வாரிசு பட வெற்றிக்கு நட்சத்திர விடுதியில் வாரிசு படக்குழுவினருக்கு விருந்து வைத்தார். மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். மேலும் சில சில சர்ச்சையான விமர்சனங்களை இயக்குனர் வம்சி மற்றும் சரத்குமார் கூறியது வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

வாரிசு 210கோடி வசூல் :

இந்த நிலையில் வாரிசு பட விநியோகஸ்த்தர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தங்கள் அதிகாரப்பூர்வ வசூல் அறிக்கையை அவர்களுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தங்களின் படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் தான் துணிவு பட தாயாரிப்பாளர்களில் ஒருவரான திரு ராகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவை கேலி செய்யும் வகையில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

வசூல் – வடை :

அதாவது அந்த பதிவில் பறவை முனியம்மா நிலாவின் மேற்பரப்பில் வடை சுட்டுக்கொண்டிருப்பது போல இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வாரிசு பட வசூலை மறைமுகமாக கேலி செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தளபதி 67, AK 62 :

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் பெயரில்லாத AK 62 படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி, அர்ஜுன் தாஸ் என பலர் நடிக்க உள்ளத்தக்க தெரிகிறது. மேலும் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது தளபதி 67ல் நடித்து வருகிறார். இப்படத்தில் சஞ்சய், கெளதம் மேனன், திரிஷா, மிஷ்கின் என பல நடித்து வருகின்றனர். மேலும் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்தாக வட இந்திய பகுதிகளில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisement