‘நல்ல வேல வம்சி, இத டெலீட் பண்ணிட்ட ? வாரிசு படத்தின் Deleted Scene – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
703
varisu
- Advertisement -

ரஜினியை பார்த்து வாரிசு படத்தில் விஜய் காப்பி அடித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து பதிவிட்டு வரும் மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து இருந்தார் விஜய்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. படத்தில் நகரில் மிகவும் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே தந்தை பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

வாரிசு படம்:

ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார். வீட்டை விட்டு வெளியேறும் விஜய் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் கட்டத்தில் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் சறுக்களை சந்திக்கிறார்.

படத்தின் கதை:

இப்படி ஒரு நிலையில் விஜய் மீண்டும் வீட்டிற்கு வர தன்னுடைய தொழிலை மீண்டும் விஜய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பின்னர் சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? சரத்குமாரின் தொழில் சாம்ப்ராஜியத்தையே விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா? என்பது தான் மீதி கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கிண்டல்:

உலக அளவில் இந்த படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினியை பார்த்து வாரிசு படத்தில் விஜய் காப்பி அடித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளிவந்திருக்கிறது. அதில் ஒரு படத்தில் ரஜினி நடித்திருப்பதைப் போலவே காப்பி அடித்து விஜய் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்.

தளபதி 67 படம்:

இதை தான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். தற்போது விஜயை கலாய்த்து வரும் மீம்ஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் பல வில்லன்கள் இருக்கின்றன. அதோடு திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படம் லோகேஷ் கனகராஜ் சினிமா டிக்கெட் யுனிவர்சில் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது என்று ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது.

Advertisement