தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.
கொண்டாட்டங்கள் :
அஜித் மற்றும் விஜய் படங்கள் 8 வருடங்கள் கழித்து இருவரது திரைப்படங்களும் ஒன்றாக வெளியாவதினால் சோசியல் மீடியாவில் சரி, வெளியிலும் சரி பல சண்டைகளும் ஏற்பட்டன. திரையரங்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணனடிகள் உடைக்கப்பட்டன போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயற்சி செய்த்தனர்.
இதனால் அந்த இடங்கள் முக்குவதும் கலவர பூமியாக காட்சியளித்து. ரோகினி திரையரங்கம் இந்த மோதலில் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு வாரிசு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் வாரிசு விநியோகஸ்த்தர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சோசியல் மீடியாக்களில் அறிவித்தனர்.
வாரிசு 210கோடி வசூல் :
இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயில் ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது.இந்த நிலையில் தான் வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடியை வசூல் செய்துள்ளது நம்பா என்று அதிகாரப்பூர்ப அறிவிப்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் விஜய் நேற்று வாரிசு பட வெற்றிக்கு நட்சத்திர விடுதியில் வாரிசு படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்.
வாரிசு வெற்றி விழா :
மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். மேலும் சில சில சர்ச்சையான விமர்சனங்களை இயக்குனர் வம்சி மற்றும் சரத்குமார் கூறியது வைரலாகி இருந்தது.அந்த பதிவில் தங்களின் படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருந்தது.
சஞ்சனா திவாரி :
இந்த படத்தில் எண்ணற்ற பிரபலங்கள் நடித்து இருந்தனர். அதில் நடிகர் ஸ்ரீகாந்தின் மகளாக நடித்து இருந்தவர் தான் இளம் நடிகை சஞ்சனா திவாரி. இப்படி ஒரு நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வாரிசு படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பலர் வாரிசு படத்தில் நீங்களே ஹீரோயினாக நடித்து இருக்கலாம் என்று வர்ணித்து வருகின்றனர்.