‘தீ தளபதி’ பாடலும் காப்பியா ? பல வீடியோக்களை பகிர்ந்து கலாய்க்கும் நெட்டிசன்கள். நீங்களே கேட்டு பாருங்க.

0
268
varisu
- Advertisement -

வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ஆஸ்தான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது.

வாரிசு படத்தின் பாடல்:

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

தீ தளபதி பாடல்:

இந்த பாடலை விஜய் திரைத்துறையில் நுழைந்து முப்பது வருடங்கள் நிறைவானதை ஒட்டி படக்குழு சமர்ப்பித்திருந்தது. மேலும், இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாடல் வெளியாகி 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இருந்தும், இந்த பாடல் குறித்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ரோல் செய்து வருகிறார்கள். அதாவது, இந்தப் பாட்டை நானும் ரவுடிதான் படத்தில் வரும் வரவா வரவா என்ற பாடலுடன் ஒப்பிட்டும், அது கன்னட பாடலுடனும் ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். தற்போது இந்த பாடலை விமர்சித்து நெட்டிசன்கள் போடும் கமெண்ட்ஸ் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement