தரமான சம்பவத்தை செய்துள்ள தமன், சிம்பு பாடிய வாரிசு படத்தின் இரண்டாம் பாடல் – வேற லெவல்ல இருக்கு.

0
389
varisu
- Advertisement -

வாரிசு படத்தின் இரண்டாம் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய்நடித்துள்ளார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜுதயாரித்து இருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார்.

இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சித்மே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த பாடலை விஜய் பாடி இருந்தார். ஆனால், இந்த பாடல் மொச்சைகொட்ட பல்லலழகி பாடலை போல இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.

-விளம்பரம்-

அதேபோல இந்த பாடலில் விஜய் ஆடிய நடனமும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு முக்கிய காரணம் பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமயமைத்த ஜானி மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தற்போது இரண்டாம் பாடலான தளபதி என்ற பாடல் வெளியாகியிருக்கிறது சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடலில் விஜய்யும் சில வினாடிகள் தோன்றி இருக்கிறார்.

Advertisement