டைட்டில் மட்டுமல்ல விஜய் பெயரிலும் V செண்டிமெண்ட் – இதுவரை நடிக்காத ரோலில் விஜய்.

0
771
varisu
- Advertisement -

இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், இசையமைப்பாளருமாவார் வம்சி இயக்கும் படம் வாரிசு. விஜய், ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இரண்டு பெரிய நட்சத்திரங்கள் கைகோர்க்கும் கூட்டனி :-

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் மகேஷ் பாபு. இந்த இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அதுமட்டுமல்லாது இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களும் நல்ல நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இந்த இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்.

- Advertisement -

அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தற்போது விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், அந்த படத்தில் தான் தெலுங்கு பிரபலம் மகேஷ் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

வாரிசு படத்தின் விஜய்யின் கதாபாத்திரம் :-

வாரிசு திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்திற்கு விஜய் ராஜேந்திரன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மென் பொறியாளராக (Software and Application Developer ) நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுவரை விஜய் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை.

-விளம்பரம்-

பொங்கல் வெளியீடு :-

விஜயின் நிஜப் பெயரையே படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. வாரிசு படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு தீவிரம் அடைந்துள்ளது. 4 ஆம் கட்ட படபிடிப்பு இந்த வாரத்துடன் ஹைத்ராபாத்தில் நிறைவடைகிறது. அதை தொடர்ந்து 5-ம் கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளனர்.

Advertisement