வர்மா படப்பிடிப்பு நிறைவு..! படத்தின் முக்கிய தகவலை அறிவித்த பாலா..!

0
697
Varma-bala
- Advertisement -

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும், `வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன்  வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

varma

- Advertisement -

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து ஹிட்டடித்த திரைப்படம், அர்ஜுன் ரெட்டி. இயக்குநர் பாலா, இதைத் தமிழில் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாடல் மேகா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன்தான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

இதில், பிக் பாஸ் சீசன்-1 புகழ் ரைஸாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வர்மா படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் வரும் 22ம் தேதி நடக்கவிருக்கிறது. அடுத்தநாளான 23ம் தேதி, துருவ் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

-விளம்பரம்-

Bala

தற்போது, படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சென்றுகொண்டிருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருவ் தெரிவித்திருக்கிறார். அடுத்த மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement