பிரபல நட்சத்திர தம்பதிகளாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் பெற்றோர்கலாவ போவதை அறிவித்ததை அடுத்து பல பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக காதல் செய்தது 2017 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் விருஷ்கா என்ற செல்லப் பெயரும் உள்ளது.
இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் குழந்தை பெறாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அனுஷ்கா சர்மா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கப்போவதாவும் விராட் கோலி கூட தனது சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தார். இதையடுத்து பல பரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையிலப பிகில் படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வர்ஷா பெல்லம்மா, விராட் கோலி விராட் கோலியின் லேட்டஸ்ட் போஸ்ட்டை தனக்கு அனுப்ப வேண்டாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதற்கு காரணம் நடிகை வர்ஷா பெல்லாம்மா விராட் கோலியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் விராட் கோலி அப்பாவாக போவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி அழகாக கூறியுள்ளார் வர்ஷா.
கடந்த சில மாதத்திற்கு முன்னர் கூட நடிகை வர்ஷா இணையத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் பேசிவந்தார். அதில் ரசிகர்கள் உங்களுக்கு யார் மேல கிரஷ் என்று கேட்டிருந்தார் . அதற்கு வர்ஷா அவர்கள் கூறியிருப்பது, எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது தான் கிரஷ். ஐ லவ் யூ கோலி என்று பதிவிட்டுஇருந்தார். மேலும், இவர் பள்ளியில் படிக்கும்போது வீராட் கோலியின் ஜெர்சி புகைப்படத்தை வரைந்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.