தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
வாரிசு படத்தின் கதை :
நகரில் மிகவும் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே அப்பா பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருந்து வருகிறார்கள். ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார்.
சூழ்ச்சிகளில் சிக்கும் குடும்பம் :
வீட்டை விட்டு வெளியேறிய விஜய் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் சரத்குமார் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் சறுக்களை சந்திக்கிறார்.இப்படி ஒரு நிலையில் விஜய் மீண்டும் வீட்டிற்கு வர தன்னுடைய தொழிலை மீண்டும் விஜய பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பின்னர் சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? சரத்குமாரின் தொழில் சாம்ப்ராஜியத்தையே விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா என்பது தான் மீதி கதை.
Extremely happy to be part of this family.
— KhushbuSundar (@khushsundar) October 26, 2022
( Was waiting for the official news from the production before me saying anything about it. ) @actorvijay @directorvamshi #DilRaju #Varisu #Varisudu #Vijay66 pic.twitter.com/BcfuWgFTDq
வாரிசு படத்தில் குஷ்பு :
இந்த படத்தில் குஷ்பூ நடித்து இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், படத்தில் ஒரு காட்சியில் கூட குஷ்பூ இடம்பெற்றவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய குஷ்பூ ‘வாரிசு படத்தைப் பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் அந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்று யார் சொன்னார் எனக்கு சரத்குமார் மற்றும் பிரபு சேரை பார்க்கத்தான் வாரிசு படப்பிடிப்பிற்கு பக்கத்தில் என்னுடைய படப்பிடிப்பு நடந்தது அதனால் நான் சென்று இருந்தேன். வாரிசு படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறி இருக்கிறார்.
கடைசி வரையில் காத்திருந்த குஷ்பூ :
ஆனால், ஏற்கனவே இந்த படம் வெளியாகும் முன்பு விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ ‘இந்த குடும்பத்தில் இணைவது மிக்க மகிழ்ச்சி. நான் செல்வதற்கு முன்பாக படக்குழு அதிகார்ப்பூர்வமாக அறிவிப்பதற்காக காத்துகொண்டு இருந்தேன்’ என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது. இந்த நிலையில் தான் வாரிசு படத்தின் எடிட்டர் பிரவின் கே எல் குஷ்பூ ஏன் நடிக்கவில்லை என்றதை பற்றி தெரிவித்திருந்தார்.
குஷ்பூ நடிக்காததற்கு எடிட்டர் கூறிய காரணம் :
அவர் கூறுகையில் `இதனை கேட்பதற்கு எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. குஷ்பூ மிகவும் அருமையாக நடித்திருந்தார், அதோடு அவருடைய கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் நீளம் கருதி குஷ்பூ நடித்த காட்சிகளை நீக்க வேண்டிய இந்த கடினமான முடிவை எடுத்தோம். குஷ்புவிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் நீங்கள் மிகவும் அற்புதமாக நடித்திருந்தீர்கள் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் Deleted காட்சிகள் ஒளிபரப்பாகும் போது கண்டிப்பாக குஷ்பூ நடித்த அணைத்து காட்சிகளையும் நீங்கள் பார்க்கலாம் என்று கூறியிருந்தார் வாரிசு பட எடிட்டர் பிரவின் கே எல். இப்படி ஒரு நிலையில் குஷ்பூ வாரிசு படத்தில் சரத் குமார் 60ஆம் கல்யாணம் நடைபெறும் காட்சியில் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.