தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவருடைய திரை பயணத்திற்கு திருப்பு முனையாக அமைந்த படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் பொன்ராம் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு கோடியப்போ என்று ஒரு பாட்டி பேசியிருப்பார். அவரின் பெயர் முத்தம்மா. இந்த படத்தில் ஒரு கோடியப்போ என்ற டயலாக் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் பிரபல சேனல் பேட்டி ஒன்று ஒன்று எடுத்து இருந்தது. மதுரையிலிருந்து பல பேர் சினிமாவில் நடிக்க சென்றிருக்கிறார்கள். தற்போது மதுரைக்கே படம் எடுக்க வருகிறார்கள். ஒரு படத்தில் நடித்து இருந்தாலும் ஒரு டயலாக் பேசி இருந்தாலும் அது மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகுவது பெரிய விஷயம்.
ஒரு கோடிப்பே முத்தம்மா அளித்த பேட்டி:
அந்த வகையில் ஒரு டயலாக் மூலம் தமிழக மக்களை மத்தியில் அறியப்பட்டவர் முத்தம்மா. அதனால் அவர்களுடைய பெயரை ஒரு கோடியப்போ முத்தம்மா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் அனுபவம் பற்றி முத்தம்மா கூறியது, எல்லோரும் என்னை ஒரு கோடியப்போ முத்தம்மா என்ற தான் கூப்பிடுகிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. நான் முதலில் சத்துணவு பள்ளியில் வேலை செய்து வந்தேன். அதற்குப் பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன். என் தாய் மாமா ஒரு வீட்டில் கூடியிருந்தார். அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் சினிமாவில் நடிப்பதற்காக செல்வார்கள். அப்பதான் ஒரு நாள் படத்திற்கு ஆட்கள் தேவைப்பட்டது என நடிக்க போனவர்கள் சொன்னார்கள்.
முத்தம்மா பாட்டிக்கு முதல் வாய்ப்பு கொடுத்தது:
அப்படித்தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பட்டாபட்டி படத்தில் தான் நான் முதன் முதலாக நடித்தேன். பின் தெற்கத்தி பெண் நாடகம் பார்ப்பதற்கு நாங்களும் சென்று இருந்தோம். அப்போது பாரதிராஜா என்னை பார்த்து இந்த அம்மாவை தனியாக கூப்பிடு பேசணும் என்று சொன்னார். அப்புறம் அவர் என்னை படங்களில் நடிக்கச் சொன்னார். ஆரம்பத்தில் எனக்கு டயலாக் பேச தெரியாது, கை காலெல்லாம் நடுங்கியது. அதற்குப் பிறகு தான் அவர்கள் சொன்ன டயலாக் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பழகினேன். எனக்கு பாரதிராஜா மூலம் தான் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
முத்தம்மாவுக்கு நடிப்பு சொல்லி தந்தது:
எப்படி பேசணும், நடிக்கணும் என்று பாரதிராஜா சொல்லிக் கொடுத்தார். அப்போ தவறாக பேசினால் தலையில் கொட்டுவார். அப்படியே பல படங்களில் நடித்தேன். ஆனால், என் வீட்டில் உள்ளவர்கள் திட்டினார்கள். உன்னைதான் டிவியிலே காமிக்க மாட்டுகிறார்கள். எதற்கு போகிறார் என்றெல்லாம் எங்கள் வீட்டில் திட்டினார்கள். அதற்குப் பிறகுதான் நான் படங்களில் டயலாக் பேசி நடிக்கிற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நான் சிவகார்த்திகேயனிடம் ஒரு கோடி ரூபாய் செலவு என்று டயலாக் பேசினேன். அந்த ஒரு டயலாக் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அனுபவம்:
ஆனால், இந்த டயலாக் நானே பேசியது. இது கடவுள் கொடுத்த வரம். கல்யாணம் நின்னு போச்சு என்று நானே எதார்த்தமாக சொன்னது. உடனே பொன் ராம் சார் மேல இருந்து பார்த்து அந்த பாட்டியை கூட்டிட்டு வாங்க என்று கூப்பிட்டார். நான் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொன்னேன். உடனே அவர் இதே டயலாக்கை 10 முறை சொல்ல முடியுமா? என்று சொன்னார். அப்படியே பேசி தான் அந்த டயலாக் படத்தில் வந்தது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு பல போராட்டங்களுக்கு பிறகு தான் நடிக்கப் போனேன். அதற்குப் பிறகு படங்களில் நடித்தேன். நீண்ட காலங்களுக்கு பிறகு சூரி தம்பியை பார்த்தேன். அவரும் உங்கள பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொன்னார். இனிமேல் நம்ம படத்தில் பண்ணலாம் என்று சொல்லிவிட்டு சென்றார் என்று முத்தம்மா கூறி இருக்கிறார். இப்படி முத்தம்மா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.