அந்த பிக் பாஸ் ஜோடிகள் கல்யாணம் பண்ணிக்கலயா.! ஏன் கவின் லாஸ்லியாவை பிரிக்கிறீங்க.! சேரனை சாடிய இயக்குனர்.!

0
12726
Cheran-kavin

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் ரகசிய அழைக்கப்பட்டிருந்தார் சேரன். ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்த சேரன் ஆலாஸ்லியாவை இப்போதே பதில் சொல்ல வேண்டும் என்று ஏன் வற்புறுத்தி கிறீர்கள் என்று கவினை கேள்வி கேட்டிருந்தார். அதன் பின்னர் நேற்றைய நிகழ்ச்சியில் ரகசிய அறையில் இருந்து மீண்டும் பிக்பாஸ்வீட்டிற்குள் சென்றார் சேரன்.

Cheran

ஆரம்பம் முதலே லாஸ்லியா, கவினிடம் பழகி வருவதை விரும்பாத சேரன் லாஸ்லியாவிடம் இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இருவருமே சேரன் பேச்சை கேட்பதாக இல்லை. இதனால் எப்படியாவது லாஸ்லியாவிடமிருந்து கவினை விலக்க வேண்டும் என்று போராடி வருகிறார் சேரன். இந்த நிலையில் லாஸ்லியாவை அவரது தந்தையும் கவின் விஷயத்தில் எதிராகவே இருந்தார்.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் பிரபலம் யாருனு தெரியுதா.! அடையாளமே தெரியல.!

- Advertisement -

இந்த நிலையில் பிரபல இயக்குனரான வசந்த பாலன், லாஸ்லியா- கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே ஏன் எதிர்க்கிறீர்கள் என்றும் இயக்குநர் வசந்த பாலன் கருத்து பதிந்துள்ளார். மேலும், கேரளாவில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்து பின்னர் காதலித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திருமணமும் செய்து கொண்டார்கள் என்பதை சுட்டி காட்டியுள்ளார் வசந்த பாலன்.

-விளம்பரம்-

மேலும், ஆக, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகதான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய?அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement