தமிழ் சினிமாவிலும் பல சுஷாந்த் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அஜித்தை நினைவு கொள்ளுங்கள் – ட்வீட் போட்ட பிரபலம் .

0
92967
ajith
- Advertisement -

ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.ல் இவருடைய மரண செய்தியை அறிந்து ரசிகர்களும், பிரபலங்களும் கவலையில் உள்ளார்கள். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழியிலும் ரசிகர்கள் உள்ளார்கள்

-விளம்பரம்-

34 வயதான சுஷாந்த் இறப்பிற்கு காரணம் மன அழுத்தம் தான் என்று கூறப்பட்டது. சுஷாந்த்தின் இறப்பு குறித்து பல்வேறு பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சுஷாந்த் இறப்பிற்கு பாலிவுட்டில் இருக்கும் நேபோட்டிசம் (வாரிசு ஆதிக்கம் ) தான் காரணம் தான் என்று பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

- Advertisement -

மேலும், சுஷாந்த் மரணத்திற்கு சல்கான் மான் போன்ற 8 பிரபலங்கள் தான் காரணம் என்றும் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில்நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவில் திறமையான நடிகர்கள் நிராகரிக்கப்படுவது குறித்து ஒரு நீண்ட பதிவை பதிவிட்டுருந்தார். இதற்கு பதில் அளித்த இளையராஜாவின் அண்ணன் மகள் வாசுகி பாஸ்கர்

ஸ்ரீசாந்தை போல தமிழ் சினிமாவிலும் பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சரியான ஊதியமும் ஆதரவும் சரியான அங்கீகாரம் கிடைப்பது கிடையாது இருப்பினும் அவர்கள் புன்னகையுடன் தைரியமாக கேமரா முன்பு தெரிகிறார்கள். சிலர் என்னிடம் இதைப் பற்றி கூறினாலும் சிலர் தங்களது வலிகளை மௌனத்திற்கு பின்னால் மறைத்துக்கொண்டு கொண்டிருக்கிறார்கள். அது போன்ற நபர்கள் இப்போதும் எப்போதும் இருக்கும் என்பதை நினைவு கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement